Aug 17, 2024
இவர் நடிகர் ஷாஹித் கபூரின் மனைவி மட்டுமல்ல, பிரபல யூடியூபராகவும் திகழ்ந்து வருகிறார். இவர் தன்னுடைய அழகான கூந்தலை பராமரிக்க இயற்கையான வழிகளையே நாடுகிறார். அந்த வகையில் இயற்கையான பொருட்களைக் கொண்டு ஹேர் ஆயிலை தயாரிக்கும் முறையை கூறுகிறார்.
Image Source: instagram-com/mira-kapoor
செம்பருத்தி, கறிவேப்பிலை, வெந்தயம், தேங்காய் எண்ணெய், நெல்லிக்காய், நெல்லிக்காய் தூள், வேம்பு மற்றும் முருங்கை இலைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
Image Source: istock
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிது தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடாக்க வேண்டும். இப்பொழுது செம்பருத்தி விழுது சேர்த்து கிளறுங்கள்.
Image Source: istock
அதில் 1 டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து நன்றாக கிளறுங்கள். வெந்தயத்தில் முடி வளர்ச்சியை தூண்டும் ஃபிளவனாய்டுகள் உள்ளன.
Image Source: pexels-com
1 டீஸ்பூன் நெல்லிக்காய், நெல்லிக்காய் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். நெல்லிக்காய் மற்றும் கறிவேப்பிலை முன்கூட்டியே முடி நரைப்பதை தடுக்கிறது.
Image Source: istock
வேப்பங்கொட்டையில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது உச்சந்தலை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. முருங்கை இலைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவற்றை சேர்த்து கிளறுங்கள்
Image Source: istock
எல்லாப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்த பிறகு எண்ணெயை கொதிக்க வையுங்கள். இப்பொழுது எண்ணெயை வடிகட்டி ஒரு ஜாடியில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். தலைக்கு குளிப்பதற்கு முன்பு எண்ணெயை அப்ளை செய்யுங்கள்.
Image Source: istock
தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம் முடியின் கரோட்டீன் இழப்பை தடுக்கிறது. கூந்தல் நீளமாக வளர உதவுகிறது. கூந்தலுக்கு ஈரப்பதத்தை வழங்குகிறது.
Image Source: istock
நெல்லிக்காய் மற்றும் கறிவேப்பிலை சேர்ப்பது கூந்தல் நீளமாகவும் கருகருவென வளர உதவுகிறது. கூந்தல் அடர்த்தியாகவும் கருமையாகவும் இருக்கும்.
Image Source: instagram-com/mira-kapoor
Thanks For Reading!