[ad_1] கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்க கருஞ்சீரக நீர் உதவுமா?

May 28, 2024

கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்க கருஞ்சீரக நீர் உதவுமா?

mukesh M

கருஞ்சீரக நீர்

பல்வேறு நோய்களின் தாக்கத்தினை தடுக்கும் அபாயம் கருஞ்சீரக நீருக்கு உள்ளது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. அத்தகைய கருஞ்சீரக விதைகளை அளவாக நாம் தினசரி உணவில் சேர்த்து கொள்வதை வழக்கமாக்கி கொண்டால் பல நன்மைகள் நமக்கு கிட்டும்.

Image Source: pixabay

தயாரிக்கும் முறை

8-10 கருஞ்சீரக விதைகளை நன்றாக இடித்து இரவு உறங்க செல்வதற்கு முன்னர் ஒரு டம்ளர் நீரில் ஊறவைத்து விடவும். மறுநாள் காலை அந்த கருஞ்சீரக நீரினை வடிகட்டி வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்வதன் மூலம் அதிக பயனை பெறலாம் என்றும் கூறப்படுகிறது.

Image Source: istock

கெட்ட கொலஸ்ட்ரால் வெளியேறும்

வெறும் வயிற்றில் இந்த கருஞ்சீரக நீரினை குடிப்பதன் மூலம் உடலில் உள்ள அதிகளவு கெட்ட LDL கொலஸ்ட்ரால் எளிய முறையில் வெளியேற்றப்படுகிறது என்பது ஆய்வின் தகவல். மேலும் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் தன்மை கொண்ட இந்த நீர் நீரிழிவு நோயாளிகளுக்கு மிக அற்புதமான மருந்தாகும்.

Image Source: pixabay

புற்றுநோயை தடுக்கும்

கருஞ்சீரகத்தில் அதிகளவு ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளதால் ப்ரீ ரேடிக்கல்கள் காரணமாக ஏற்படும் பல்வேறு அபாயமிக்க நோய்கள் ஏற்படும் அபாயத்தினை தடுக்கிறது. குறிப்பாக புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களின் வளர்ச்சியினை இந்த கருஞ்சீரக நீர் தடுக்கிறது.

Image Source: unsplash

உடல் எடை குறையும்

உடலில் உள்ள மெட்டபாலிசத்தினை மேம்படுத்தி கெட்ட கொழுப்புகளை அதிகளவு வெளியேற்றும் தன்மை கொண்ட இந்த கருஞ்சீரக நீரை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வர, உடல் எடையினை எளிதில் குறைக்கலாம்.

Image Source: unsplash

உயர் ரத்த அழுத்தம்

கருஞ்சீரக நீர் ரத்த சர்க்கரை அளவினை சீராக பராமரிப்பதோடு உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படும் அபாயத்தினையும் தடுக்கிறது.

Image Source: unsplash

பாக்டீரியாக்களை அழிக்கும் கலோஞ்சி நீர்

கலோஞ்சி நீர் என்றும் அழைக்கப்படும் இந்த கருஞ்சீரக நீரினை வெறும் வயிற்றில் தினமும் குடித்து வர, உடல்நிலையினை பாதிக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகிறது. கருஞ்சீரக விதைகளில் அதிகளவு ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் நிறைந்துள்ளதால் அவ்வப்போது நோய் பாதிப்பு ஏற்படுவதினை தடுக்கலாம்.

Image Source: unsplash

இருதய ஆரோக்கியம் மேம்படும்

உடலின் எல்டிஎல் கொழுப்பினை குறைத்து, எச்டிஎல் கொழுப்பினை அதிகரிக்கும் இந்த கலோஞ்சி நீரால் இருதய ஆரோக்கியம் மேம்படுவதோடு மாரடைப்பு, பக்கவாதம், இருதயம் சம்மந்தப்பட்ட நோய்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது.

Image Source: istock

செரிமானத்தினை சீராக்கும்

கருஞ்சீரக நீரினை தொடர்ந்து குடித்து வர, அதிலுள்ள செரிமான நொதிகளின் உற்பத்தி தூண்டப்பட்டு செரிமான பிரச்சனை சீராகும். கருஞ்சீரக நீரினை அருந்துவதோடு நல்ல உணவுமுறை மற்றும் வழக்கமான உடற்பயிற்சி மேற்கொள்வது முழு பயனையும் அளிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Image Source: pexels-com

Thanks For Reading!

Next: ‘இதய நோயாளிகளுக்கு ப்ளூபெர்ரி’ - நல்லதா? கெட்டதா?

[ad_2]