[ad_1] கெளதம் கம்பீரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கெளதம் கம்பீரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

mukesh M

Jul 10, 2024

கௌதம் கம்பீர் எனும் கோடீஸ்வரன்!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்கவுள்ள கௌதம் கம்பீரின் சொத்து மதிப்பை கேட்டால் பலரும் ஆச்சரியத்தில் மூழ்குவிடுவார்கள். ஆம்! பல கோடிகளுக்கு அதிபதியான கௌதம் க‍ம்பீரின் சொத்து விவரங்கள் பற்றி சற்று விரிவாக இங்கு காணலாம்!

Image Source: x-com

கௌதம் கம்பீரின் வருமானம்!

கௌதம் கம்பீரின் வருமானம்!

பிராண்ட் ஸ்பான்ஸர்ஷிப், முதலீடுகள், ரியல் எஸ்டேட், உணவகம் உள்ளிட்ட தொழில் முயற்சிகள் வழியே என பல்வேறு வகையில் வருமான் ஈட்டும் கௌதம் கம்பீரின் சொத்து மதிப்பு சற்றேறக்குறைய ரூ.265 கோடி ($32 மில்லியன்) என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Image Source: x-com

19% வருவாய்!

முதலீடுகள், தொழில் முயற்சிகள் என பல்வேறு வகையில் தனது சேமிப்புகளை மூலதனமாக பயன்படுத்தி வரும் கௌதம் கம்பீர், தனது மொத்த செல்வத்தின் வழியே 19% வரையில் வருவாய் ஈட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன!

Image Source: x-com

கிரிக்கெட் வழியில் வருமானம்?

இந்திய கிரிக்கெட் அணிக்காக சுமார் 13 ஆண்டுகள் தனது சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்திய கம்பீர், தனது கிரிக்கெட் வாழ்வுக்கு பின் அரசியல் இணைந்த‍தோடு, தனியார் தொலைக்காட்சி வர்ணனையாளராகவும் பணியாற்றினார். இந்த வழியில் மாதம் 1.5 கோடி வரையில் சம்பாதித்து வந்தார்!

Image Source: x-com

LSG அணியின் மென்டார்!

2022 மற்றும் 2023 ஆண்டு நடைப்பெற்ற IPL தொடர்களில் LSG அணியின் மென்டாராக பணியாற்றி, அணியை playoff வரை அழைத்து சென்ற கம்பீர், குறித்த இந்த காலத்தில் 2.5 கோடி வரையில் ஊதியம் பெற்றதாக தெரிகிறது!

Image Source: x-com

KKR அணியின் பயிற்சியாளர்!

தொடர்ந்து 2024-ஆம் ஆண்டு நடைப்பெற்ற தொடரில் KKR அணியை வழிநடத்திய கம்பீர், இத்தொடரின் போது 25 கோடி வரையில் ஊதியம் பெற்றிருக்கலாம் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவி்க்கிறது!

Image Source: x-com

அரசியல் வழியே வருமானம்!

கிரிக்கெட் வாழ்க்கைக்கு பின் முழு நேர அரசியல்வாதியாக மாறிய கம்பீர், 2019 – 2024 இடைப்பட்ட காலத்தில் கிழக்கு டெல்லியின் பணியாற்றினார். இதன் போது அவரது ஊதியம், கொடுப்பனவு என பல லட்சங்களை சம்பாதித்துள்ளார்.

Image Source: x-com

ஆடம்பர வீடாக மாறிய சேமிப்புகள்!

தகவல்கள் படி கம்பீர் தனது சேமிப்புகளை பயன்படுத்தி டெல்லியில் 20 கோடி மதிப்பிலான ஆடம்பர வீடு ஒன்றை கட்டியுள்ளார். அதுமட்டும் அல்லாது டெல்லியின் ராஜிந்தர் நகர் மற்றும் கரோல் பாக் பகுதியில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு வீடுகளையும் கொண்டுள்ளார்!

Image Source: x-com

ஆடம்பர கார்கள்!

இதேப்போன்று தனது வருமானத்தை பயன்படுத்தி கம்பீர் Audi Q5, BMW 530D, Toyota Corolla, Mahindra Bolero Stinger போன்ற ஆடம்பர கார்களையும் வாங்கியுள்ளர்.

Image Source: x-com

Team India பயிற்சியாளராக வருமானம்?

இதற்கிடையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்கும் கம்பீர், ஆண்டிற்கு 10 கோடி ரூபாய் ஊதியம் பெறுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன!

Image Source: x-com

Thanks For Reading!

Next: தலைமை பயிற்சியாளராக 'கவுதம் கம்பீர்' சந்திக்கப்போகும் சவால்கள் என்னென்ன?

[ad_2]