[ad_1] கேரளாவின் அழகிய நகரம்.. பாலக்காட்டில் பார்க்க வேண்டிய சுற்றுலா தளங்கள்

May 19, 2024

கேரளாவின் அழகிய நகரம்.. பாலக்காட்டில் பார்க்க வேண்டிய சுற்றுலா தளங்கள்

Anoj

பாலக்காடு சுற்றுலா

பசுமையான வயல், நீளமான தென்னை மரங்கள், மூடுபனி மலைகள் என இயற்கை அழகு நிறைந்திருக்கும் கேரளாவின் பாலக்காட்டில் பார்க்க வேண்டிய முக்கிய சுற்றுலா தளங்களை பற்றி காணலாம்

Image Source: unsplash-com

பாலக்காடு கோட்டை

இந்த கோட்டை நகரின் முக்கிய அடையாளமாகும். வரலாற்று சிறப்பை கொண்டுள்ள இந்த கோட்டை, சுற்றுலா வாசிகளின் ஃபேவரைட் இடமாகும். காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை, மக்களின் பார்வைக்காக திறந்திருக்கும்

Image Source: instagram-com/palakkad_official

மலம்புழா

மலம்புழா, பாலக்காட்டில் இருந்து 13 கி.மீ தொலைவில் உள்ளது. மலம்புழா அணை மற்றும் தோட்டங்கள், இயற்கை எழில் கொஞ்சும் இடங்களாகும். மலம்புழா அணையில் படகு சவாரியிலும் பார்வையாளர்கள் ஈடுபடலாம். மன அமைதியை விரும்புவோருக்கு சிறந்த இடமாகும்

Image Source: unsplash-com

பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம்

இது குடும்பத்தினருடன் ஒருநாள் பிக்னிக் செல்ல சிறந்த இடமாகும். பல்வேறு பறவை மற்றும் விலங்கினங்களை காண முடியும். இதுதவிர, சுற்றுலா வாசிகளுக்காக மீன்பிடித்தல் மற்றும் படகு சவாரி போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன

Image Source: instagram-com/roarwildindia

சைலண்ட் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா

இந்த பள்ளத்தாக்கு வளமான பல்லுயிர் வளத்தைக் கொண்டுள்ளது. அரிய வகை விலங்குகள் மற்றும் பறவைகள் பள்ளத்தாக்கில் காண முடியும். இங்கு 1000க்கும் மேற்பட்ட தாவரங்களும், 34க்கும் மேற்பட்ட பாலூட்டி இனங்களும், 200 வகையான பட்டாம்பூச்சிகளும் உள்ளன

Image Source: instagram-com/wander_diaries__

சிறுவாணி அணை

இந்த அணை பாலக்காடு நகரில் இருந்து 80 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. அணையின் கிழக்குப் பகுதியில் 2000 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டும் அருவி உள்ளது. இந்த இடத்தின் அழகும், குளிர்ச்சியான காலநிலையும் சுற்றுலா வாசிகளை அதிகளவில் ஈர்க்க செய்கிறது

Image Source: instagram-com/tour_explore_india

மங்கலம் அணை

இந்த மிகப்பெரிய அழகிய அணை, பாலக்காடு நகரில் இருந்து 48 கி.மீ., தொலைவில் உள்ளது. Cherukunnapuzha ஆற்றில் கட்டப்பட்டுள்ள இந்த அணை பகுதியில் ஏராளமான விலங்குகளை காண முடியும். இது மக்களிடையே பிரபலமான சுற்றுலா தளமாகும்

Image Source: instagram-com/_divya_gopan

நெல்லியம்பதி மலைகள்

தேயிலை மற்றும் காபி தோட்டங்களால் சூழ்ந்திருக்கும் இந்த மலைப்பிரதேசம், மேற்கு தொடர்ச்சி மலைகளின் பரந்த காட்சிகளை வழங்குகிறது. அதன் வளைவுகளில் வாகனத்தை ஓட்டுவது மிகவும் சவாலாக இருக்கக்கூடும

Image Source: instagram-com/nisar_mhmd__ec

Meenvallam நீர்வீழ்ச்சி

இது பாலக்காட்டின் மறைக்கப்பட்ட ரத்தினமாகும். சுமார் 45 மீட்டர் உயரத்தில் இருந்து தண்ணீர் பாயக்கூடும். வனப்பகுதிக்குள் 8 கி.மீ தூரம் பயணித்தால் இந்த அழகிய நீர்வீழ்ச்சியில் நீராடி மகிழலாம்

Image Source: instagram-com/zad-__-mubarak

Thanks For Reading!

Next: மைசூர் அரண்மனை பற்றி பலரும் அறிந்திராத சில அரிய தகவல்கள்!

[ad_2]