May 6, 2024
கேரளாவின் தனித்துவமான வீடுகளை போன்று நம் வீட்டையும் அழகாக மாற்ற உதவும் எளிய குறிப்புகள் சிலவற்றை பற்றி இங்கு நாம் காணலாம்!
Image Source: instagram-com
கேரளாவில் கட்டப்படும் வீடுகளின் தனித்துவமான அழகுக்கு வீடுகளில் பயன்படுத்தும் மரங்கள் ஒரு முக்கிய காரணம் ஆகும். வீட்டின் 45% பகுதியை மரத்தால் மெருகூட்டும் வழக்கம் கேரள மக்களிடம் காணப்படுகிறது.
Image Source: instagram-com
கேரள மக்களின் வீடுகளில் அதிகம் பயன்படுத்தும் மரங்களாக தேக்கு மரம், ரோஸ் வுட், மங்கோலிய மரம் பார்க்கப்படுகிறது. மரச்சாமன்கள் மட்டும் அல்லாது, மேற்கூரை, சீலிங்ங், சுவர்கள் என அனைத்திலும் மரங்களை பயன்படுத்துகின்றனர்.
Image Source: instagram-com
தரைக்கு டைல்ஸ், மார்பல் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு பதில் Oxide flooring பயன்படுத்துவதை கேரள மக்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இந்த முறை ஆனது பாரம்பரியத்தை தற்காலத்திற்கு கடத்தி வரும் அம்சமாக உள்ளது.
Image Source: instagram-com
Oxide flooring வழக்கத்தை தவிர்த்து terracotta டைல்ஸ் பயன்படுத்துவதையும் இவர்கள் வைத்துள்ளனர். இந்த terracotta டைல்ஸ்-கள் வீட்டிற்கு பாரம்பரிய தோற்றத்தை அளிக்கும் என இவர்கள் நம்புகின்றனர்.
Image Source: instagram-com
வீடு என்றால் மனிதர்கள் வசிப்பதற்கான இடமும் - மரங்கள் வசிப்பத்தற்கான இடமும் என்று கேரள மக்கள் நம்புகின்றனர். அந்த வகையில் வீட்டின் சதுர அளவுக்கு இணையாக தோட்டத்திற்கு தனி இடம் ஒதுக்கி, வீட்டிற்கு பசுமையான ஒரு தோற்றத்தை அளிக்கின்றனர்.
Image Source: instagram-com
கேளராவில் காணப்படும் வீடுகள் பெரும்பாலும் சிவப்பு, பழப்பு, பச்சை என நிலம் மற்றும் மரங்கள் சார்ந்த இயற்கை வண்ணங்களை ஒன்றியே இருக்கும். இந்த வண்ணங்கள் ஆனது வீட்டிற்கு ஒரு பசுமையான தோற்றத்தை அளித்து, அழகை அதிகரிக்கிறது.
Image Source: instagram-com
வீட்டை சுற்றி தோட்டத்தை அமைக்கும் அதேநேரம், வயல்வெளிகளுக்கு நடுவே வீட்டை (தனி வீடாக) கட்டுவதையும் கேரள மக்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.
Image Source: instagram-com
Thanks For Reading!