[ad_1] கேரளாவின் இந்த '7 அதிசயங்கள்' பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க!

Aug 7, 2024

கேரளாவின் இந்த '7 அதிசயங்கள்' பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க!

Anoj, Samayam Tamil

கேரளா சுற்றுலா ஸ்பாட்ஸ்

கடவுளின் தேசமாக திகழும் கேரளாவை காண உலக முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். அழகிய மலைப்பகுதி, தேயிலை தோட்டம், நீர்வீழ்ச்சி என இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் கேரளாவில் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய 7 அதிசயங்களை பற்றி இங்கு பார்க்கலாம்

Image Source: instagram-com/aparnabaiju

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 80 அடிக்கு மேல் இருந்து தண்ணீர் கொட்டும் காட்சி பார்வையாளர்களை பிரமிக்க வைத்திடும்.

Image Source: instagram-com/thenomadic__soul

அகத்தியமலை

அகத்தியமலை, கேரளாவின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. மருத்துவ குணங்கள் நிறைந்த தாவரங்கள் மற்றும் பல்வேறு வன விலங்குகளின் வாழ்விடமாக திகழ்கிறது. ட்ரெக்கிங் செல்ல மிகவும் பிரபலமான இடமாகும்

Image Source: instagram-com/its_trivandrum

வேம்பநாடு காயல்

சுமார் 1,512 கிலோமீட்டர் பரப்பளவை கொண்டிருக்கும் வேம்பநாட்டு காயல், கேரளாவின் மிகப்பெரிய ஏரியாகும். ஆலப்புழா, கோட்டயம் என பல மாவட்டங்களில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த ஏரியில், ஓணம் பண்டிகையின் போது புகழ்பெற்ற படகு போட்டியும் நடைபெறக்கூடும்

Image Source: instagram-com/vishnu_cam_stories

எடக்கல் குகைகள்

எடக்கல் குகைகள், வயநாட்டில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும். உலகெங்கிலும் உள்ள வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களை கவர்ந்த இந்த குகைகளின் சுவர்களில் கல்வெட்டுகள், பழங்கால விலங்குகள் மற்றும் மனிதிர்களின் உருவங்களை காண முடியும்

Image Source: instagram-com/ns_w0kie

கொச்சி

அரபிக்கடலின் ராணியான கொச்சி நகரமும், கேரளாவின் 7 அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு சுற்றுலா தளங்கள் மட்டுமின்றி புலம்பெயர்ந்த மக்களின் வெவ்வேறு கலாச்சாரங்களை காண முடியும்

Image Source: unsplash-com

அமைதி பள்ளத்தாக்கு

இது கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. 1847ல் தாவரவியலாளர் ராபர்ட் வைட்டால் என்பவரால் கண்டறியப்பட்ட இப்பகுதி, சிங்கவால் மக்காக் உட்பட பல அரிய வன விலங்குகளின் வாழ்விடமாக திகழ்கிறது.

Image Source: instagram-com/palakkatukaar

செம்ப்ரா சிகரம்

இது வயநாட்டின் மற்றொரு அதிசயமாகும். இந்த சிகரத்தின் உச்சியில், இதய வடிவிலான மலை ஏரியைக் காண முடியும். இது ட்ரெக்கிங் மற்றும் சாகச ஆர்வலர்களுக்கு மிகவும் விருப்பமான இடமாகும்

Image Source: unsplash-com

கேரளாவின் அதிசயங்கள்

இந்த 7 இடங்கள் மட்டுமின்றி கேரளாவில் பல இயற்கை அதிசயங்கள் ஆங்காங்கே மறைந்து கிடைக்கின்றன. கேரளாவின் இயற்கை அழகை அனுபவிக்க குறைந்தது 5 நாட்கள் தேவைப்படும். அந்த பட்டியலில் இந்த 7 இடங்களை மறக்காமல் சேர்த்துகொள்ளுங்கள்

Image Source: unsplash-com

Thanks For Reading!

Next: கப்பலில் இன்ப சுற்றுலா செல்வதற்கான சிறந்த 8 இடங்கள்

[ad_2]