[ad_1] கேரளாவின் ஸ்பெஷல் ‘புட்டு பிரியாணி’ செய்வது எப்படி?

May 6, 2024

கேரளாவின் ஸ்பெஷல் ‘புட்டு பிரியாணி’ செய்வது எப்படி?

mukesh M

கேரளா புட்டு பிரியாணி!

வழக்கமான அரிசி பிரியாணிக்கு மாற்றாக புட்டு பயன்படுத்தி பிரியாணி ஒன்றினை தயார் செய்வது எப்படி என இங்கு நாம் காணலாம்!

Image Source: istock

தேவையான பொருட்கள்!

சிக்கன் - 200கி | மிளகாய் பொடி - 1 ஸ்பூன் | மஞ்சள் - ½ பொடி | மிளகு - ½ ஸ்பூன் | சிக்கன் மசாலா - 1½ ஸ்பூன் | கரம் மசாலா - ½ ஸ்பூன் | நெய் - 3 ஸ்பூன்

Image Source: istock

தேவையான பொருட்கள்!

வெங்காயம் - 2 | தக்காளி - 2 | பூண்டு பல் - 3 | இஞ்சி - 1" | பச்சை மிளகாய் - 2 | புதினா - 1 கைப்பிடி | கொத்தமல்லி - 1 கைப்பிடி | அரிசி மாவு - 1 கப் | உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

Image Source: istock

செய்முறை படி - 1

முதலில் எடுத்துக்கொண்ட சிக்கன், தக்காளி, வெங்காயம், புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை நன்கு சுத்தம் செய்து பின் பொடியாக நறுக்கி தனித்தனியே தயாராக எடுத்து வைக்கவும்.

Image Source: pexels-com

செய்முறை படி - 2

தொடர்ந்து சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளுடன் மஞ்சள், உப்பு, மிளகாய் பொடி, மிளகு பொடி ஆகியவற்றை சேர்த்து மேரினேட் செய்து தனியே எடுத்து வைக்கவும்.

Image Source: istock

செய்முறை படி - 3

இதனிடையே எடுத்துக்கொண்ட அரிசி மாவை புட்டு குட்டியில் சேர்த்து பதமாக அவித்து புட்டு தயார் செய்துக்கொள்ளவும்.

Image Source: istock

செய்முறை படி - 4

தற்போது பிரியாணி தயார் செய்ய பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் நெய்யுடன் வெங்காயம், பட்டை லவங்கம், பூண்டு உள்ளிட்டவற்றை சேர்த்து வதக்கவும்.

Image Source: istock

செய்முறை படி - 5

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி, மேரினேட் செய்த சிக்கன் சேர்த்து 7 - 8 நிமிடங்களுக்கு வேக வைக்கவும். தொடர்ந்து நறுக்கிய கொத்தமல்லி, புதினா, உப்பு, மிளாய் பொடி சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

Image Source: istock

புட்டு பிரியாணி ரெடி!

பின் இறுதியாக தயாராக உள்ள புட்டை உதிரித்து சேர்த்து (நன்கு கிளறி) பாத்திரத்தை மூடி 5 - 7 நிமிடங்களுக்கு தம் கட்டி இறக்க சுவையான புட்டு பிரியாணி ரெடி!

Image Source: istock

Thanks For Reading!

Next: ஊட்டச்சத்து மிக்க பூங்கார் அரிசி கஞ்சி செய்முறை!

[ad_2]