[ad_1] கேரளாவில் கட்டாயம் செல்ல வேண்டிய 'அக்குளம் சுற்றுலா கிராமம்'

Jul 17, 2024

கேரளாவில் கட்டாயம் செல்ல வேண்டிய 'அக்குளம் சுற்றுலா கிராமம்'

Anoj

அக்குளம் சுற்றுலா கிராமம்

இது கேரளாவின் திருவனந்தபுரத்தில் அமைந்திருக்கும் சூப்பர் பிக்னிக் ஸ்பாட் ஆகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தாராளமாக செல்லலாம். இந்த அக்குளம் சுற்றுலா கிராமத்தின் சிறப்புகளை இங்கு பார்க்கலாம்

Image Source: instagram-com/_trivandrum_diaries_

படகு சவாரி

இந்த சுற்றுலா கிராமத்தின் முக்கிய அம்சமாக படகு சவாரி திகழ்கிறது. துடுப்பு படகு, ஸ்பீடு படகு போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை போட்டிங் செல்லலாம். நீங்கள் படகில் பயணம் செய்யும் நேரத்தை பொறுத்து கட்டணம் மாறுபடக்கூடும்

Image Source: instagram-com/akkulamtouristvillage

டாய் ட்ரெயின்

குழந்தைகளுக்காக ஊஞ்சல், சறுக்கு போன்ற ஏராளமான விளையாட்டுகள் உள்ளன. இதுதவிர, குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பயணிக்கும் டாய் ட்ரெயின் வசதியும் உள்ளது

Image Source: instagram-com/akkulamtouristvillage

ஏர் இந்தியா மியூசியம்

சுற்றுலா கிராமத்தில் அமைந்துள்ள ஏர் இந்தியா மியூசியத்தில், விமானத் துறை பயன்படுத்திய ஏராளமான விமானங்களின் மாடல்களை காண முடியும். விமானத்தை ஓட்டும் அனுபவத்தை பெற பிரத்யேக வசதியும் ஏற்பாடு செய்துள்ளனர்.

Image Source: instagram-com/_trivandrum_diaries_

நீச்சல் குளம்

வெயிலில் இருந்து தப்பித்திட பிரம்மாண்ட நீச்சல் குளமும் அமைக்கப்பட்டுள்ளது. 1 மணி நேரத்திற்கு பெரியவர்களிடம் 100 ரூபாயும், குழந்தைகளிடம் 50 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

Image Source: instagram-com/_trivandrum_diaries_

சைக்கிளிங் பார்க்

சுற்றுலா கிராமத்தை சுற்றிவர சைக்கிங் பார்க் பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, ஜிப்லைன் போன்ற ஏராளமான சாகச விளையாட்டுகளும் உள்ளது

Image Source: instagram-com/akkulamtouristvillage

கண்ணாடி பாலம்

அக்குளம் சுற்றுலா கிராமத்தில் மிக நீளமான கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இந்த பாலத்தில் விரிசல் விழுந்ததால் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது பாலம் திறந்திருக்கிறதா என்பதை விசாரித்துவிட்டு செல்லுங்கள்

Image Source: instagram-com/_trivandrum_diaries_

நுழைவு கட்டணம் என்ன?

பெரியவர்களிடம் 30 ரூபாயும், 12 வயது குறைவான குழந்தைகளிடம் 20 ரூபாயும் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒருநாள் முழுவதும் செலவிட விரும்பினால் உணவுகளுடன் சேர்த்து பிரத்யேக பேக்கேஜ் வசதியும் உள்ளது

Image Source: instagram-com/akkulamtouristvillage

சிறந்த நேரம் எது?

அக்குளம் சுற்றுலா கிராமத்திற்கு எந்த மாதத்திலும் தாராளமாக செல்லலாம். இனிமையான காலநிலை உணர அக்டோபர் முதல் மார்ச் மாதத்தில் செல்வது சிறந்த முடிவாகும். இது பட்ஜெட் ட்ரிப் விரும்புவோருக்கு ஏற்ற ஸ்பாட்டாகும்

Image Source: instagram-com/_trivandrum_diaries_

Thanks For Reading!

Next: ஒன்றுக்கு மேற்பட்ட தலைநகரங்களைக் கொண்ட நாடுகள்!

[ad_2]