[ad_1] கேரளாவில் மறைந்திருக்கும் ரத்தினம்.. தோனி நீர்வீழ்ச்சி பற்றி தெரியுமா?

Jun 6, 2024

கேரளாவில் மறைந்திருக்கும் ரத்தினம்.. தோனி நீர்வீழ்ச்சி பற்றி தெரியுமா?

Anoj

தோனி நீர்வீழ்ச்சி

அடர்ந்த காடுகள் வாயிலாக சுமார் 3 மணி நேரம் ட்ரெக்கிங் பயணத்தின் முடிவில் இந்த மயக்கும் தோனி நீர்வீழ்ச்சியை காண முடியும். இந்த நீர்வீழ்ச்சி ட்ரிப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இங்கு பார்க்கலாம்

Image Source: instagram-com/habeeb_facelook_

எங்கு இருக்கிறது?

இந்த நீர்வீழ்ச்சி, கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து சுமார் 12 கி.மீ., தொலைவில் தோனி மலையின் உச்சியில் அமைந்துள்ளது.

Image Source: instagram-com/kerala_explorers

பெயர் காரணம்

இந்த மலையில் படகு வடிவ பாறை ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டது. மலையாளத்தில் படகை thoni என அழைப்பார்கள். இந்த பெயர் காலப்போக்கில் Dhoni என மாறி, மிகவும் பிரபலமான சுற்றுலா தளமாக மாறிவிட்டது

Image Source: instagram-com/enta-yathrakal

நுழைவு கட்டணம்

இந்த நீர்வீழ்ச்சி ட்ரெக்கிங் பயணத்திற்கு வனத்துறையிடம் அனுமதி பெறுவது அவசியமாகும். என்ட்ரி டிக்கெட்-வுடன் சேர்த்து அனுமதி சீட்டும் வழங்கப்படக்கூடும். இங்கு செல்வதற்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது

Image Source: instagram-com/enta-yathrakal

ட்ரெக்கிங் பயணம்

மலையின் அடிவாரத்தில் இருந்து சுமார் 3 முதல் 4 கி.மீ ட்ரெக்கிங் பாதையில் பயணிக்க வேண்டும். தோனி நீர்வீழ்ச்சி சிறியது என்றாலும், அதன் பசுமையான சுற்றுப்புறம் காரணமாக சுற்றுலா வாசிகளுக்கு சிறந்த அனுபவத்தை தர செய்கிறது

Image Source: instagram-com/entekeralam01

காட்டு விலங்குகள்

இந்த மலைத்தொடரில் யானை, புலி, கிங் கோப்ரா போன்ற ஏராளமான காட்டு விலங்குகள் உள்ளது. எனவே, ட்ரெக்கிங் பாதை இல்லாமல் வேறு வழியில் செல்லவே கூடாது. ஒரு வேளை ட்ரெக்கிங் பாதையில் விலங்குகள் இருக்கும் பட்சத்தில், அவற்றை கிளியர் செய்யும் வரை மக்கள் செல்ல அனுமதி கிடையாது

Image Source: instagram-com/wi_ld_ro_ck

காலையில் செல்லுங்கள்

இந்த ட்ரெக்கிங் பயணத்தை காலையில் திட்டமிடுவது மூலம் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பித்திட முடியும். இங்கு செல்வதற்கு குறிப்பிட்ட டைம் ஸ்லாட் இருப்பதாகவும், மதியம் 2 மணிக்கு மேல் செல்ல முடியாது என கூறப்படுகிறது. இதை முன்கூட்டியே விசாரிப்பது நல்லது

Image Source: instagram-com/archivesofadarsh

சிறந்த நேரம் எது?

இந்த நீர்வீழ்ச்சிக்கு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் திட்டமிட செய்யலாம். அப்போது தண்ணீர் இருப்பு அதிகமாக இருக்கக்கூடும். நீர்வீழ்ச்சியில் நேரடியாக குளிக்க அனுமதி இல்லை என்றாலும், தண்ணீர் தேங்கும் குளம் போன்ற இடத்தில் குளிக்க செய்யலாம்

Image Source: instagram-com/archivesofadarsh

பாதுகாப்பாக செல்லுங்கள்

இந்த ட்ரெக்கிங் பாதையில் எவ்வித கடைகளும் இல்லாததால், தண்ணீர் மற்றும் உணவை எடுத்துசெல்லுங்கள். இங்கு வனவிலங்குகள் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், உங்களுடன் வனத்துறை அலுவலரும் பாதுகாப்பிற்கு வர செய்வார்

Image Source: pexels-com

Thanks For Reading!

Next: உலகின் மிகப்பெரிய காடுகளைக் கொண்ட நாடுகள்!

[ad_2]