[ad_1] கேரளாவில் மறைந்திருக்கும் குருவா தீவு... ரூ.110 இருந்தா போதும்!

Jun 20, 2024

கேரளாவில் மறைந்திருக்கும் குருவா தீவு... ரூ.110 இருந்தா போதும்!

Anoj

குருவா தீவு

கேரளாவின் வயநாட்டில் அமைந்துள்ள குருவா தீவு, கபினி ஆற்றுக்கு நடுவே 950 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இயற்கை ஆர்வலர்களின் சொர்க்க பூமியாக திகழும் குருவா தீவின் சிறப்புகளை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்

Image Source: instagram-com/keralatours_

மூங்கில் படகு சவாரி

மூங்கில் படகு சவாரி, குருவா தீவின் சிறப்பு அம்சமாகும். தீவின் அழகிய சுற்றுப்புறத்தை கண்டு ரசிக்க இந்த படகு சவாரி சிறந்த தேர்வாகும். இதற்கு பிரத்யேக கட்டணம் வசூலிக்கப்படுகிறது

Image Source: instagram-com/vishnu___km

இயற்கையை ரசிக்கலாம்

குருவா தீவின் சுற்றுப்புற அழகை கண்டு ரசித்தப்படி நடைபயிற்சி மேற்கொள்ளலாம். பறவைகள் சத்தம் மட்டுமே கேட்கும் அமைதியான சூழலை அனுபவிக்க முடியும். நீங்கள் துணையுடன் குருவா தீவுக்கு செல்லும் பட்சத்தில், இது மிகவும் ரொமான்டிக் ஆக இருக்கக்கூடும்

Image Source: instagram-com/thatgirlyouwished

வனப்பகுதி ட்ரெக்கிங்

சுற்றுலா பயணிகள் குருவா தீவில் ட்ரெக்கிங் செயலிலும் ஈடுபட செய்யலாம். அடர்ந்த பசுமையான காடுகளில் அரிய வகை செடிகளை பார்த்தப்படி பயணிக்கலாம். மூங்கில் மரங்களால் செய்யப்பட்ட பாலங்களில் பயணிக்கக்கூடிய அனுபவங்களும் கிடைக்கக்கூடும்

Image Source: instagram-com/wayanadtourism

பறவைகள் கண்காணிப்பு

குருவா தீவு பறவை ஆர்வலர்களின் விருப்பமான இடமாகும். அது பல்வேறு புலம்பெயர்ந்த பறவைகளின் தாயகமாக திகழ்கிறது. அரிய வகை பறவைகளை கண்டு ரசிக்க மறக்காமல் பைனாகுலர் எடுத்துச் செல்லுங்கள்

Image Source: pexels-com

போட்டோகிராபி ஸ்பாட்

குருவா தீவு, இயற்கை அழகை புகைப்படங்கள் எடுத்திட சூப்பர் ஸ்பாட்டாகும். பல்வேறு பறவை இனங்கள், மூலிகை செடிகள் மற்றும் மரங்களை புகைப்படங்கள் எடுக்கலாம். வனப்பகுதியிலும், குருவா தீவின் நதியோரமும் அழகிய போட்டோஸ் எடுத்தப்படி நேரத்தை செலவிடலாம்

Image Source: instagram-com/thetravellingreviewer

உள்ளூர் உணவுகள்

குருவா தீவுக்கு அருகே கேரளாவின் உள்ளூர் உணவுகளை ருசித்திட செய்யலாம். நுழைவாயிலுக்கு அருகிலுள்ள கடைகளில் ஆற்றில் இருந்து பிரஷ்ஷாக பிடிக்கப்பட்ட மீன்களை, மலபாரி மசாலாப் பொருட்கள் பயன்படுத்தி சமைத்து விற்பனை செய்யப்படம்

Image Source: istock

நேரமும், கட்டண விவரமும்

குருவா தீவுக்கு காலை 9 மணி முதல் மாலை 3.30 வரை சுற்றுலா வாசிகள் செல்ல அனுமதி உள்ளது. இதற்கு நுழைவு கட்டணமாக ரூ.110 வசூலிக்கப்படுகிறது. கேமரா மற்றும் பார்க்கிங் தனி கட்டணம் வசூலிக்கப்படக்கூடும்

Image Source: instagram-com/devil-himalayan

சிறந்த நேரம் எது?

ஒரு நாளைக்கு 575 சுற்றுலா வாசிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால், காலையிலே செல்வது சிறந்த முடிவாகும். அக்டோபர் முதல் பிப்ரவரி இடையிலான மாதத்தில் சென்றால் இனிமையான காலநிலையில் ஒட்டுமொத்த தீவும் கண்டு ரசிக்கலாம்

Image Source: instagram-com/silent_rover

Thanks For Reading!

Next: பனி பாலைவனமான அண்டார்டிகா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

[ad_2]