May 19, 2024
BY: Anojஇது அன்னாசியில் செய்யக்கூடிய சுவையான உணவாகும். பண்டிகை நாட்களில் தவறாமல் இடம்பெறும் இந்த உணவை எப்படி அதே சுவையில் செய்வது என்பதை இங்கு பார்க்கலாம்
Image Source: istock
அன்னாசி - 1;நறுக்கிய தேங்காய் துண்டுகள் - அரை கப்; தயிர் - அரை கப்; ப.மிளகாய் - 2; சீரகம் - 1 டீஸ்பூன்; நாட்டு சர்க்கரை - 3 டீஸ்பூன்; உப்பு - தேவைக்கேற்ப; கடுகு - சிறிதளவு; எண்ணெய் - தேவையான அளவு
Image Source: istock
முதலில் குக்கரில் சிறிய துண்டுகளாக வெட்டிய அன்னாசிப்பழத்தை சேர்க்க வேண்டும்
Image Source: pexels-com
அத்துடன் மஞ்சள் மற்றும் தேவையான அளவு தண்ணீரை சேர்த்து, குக்கரை மூட வேண்டும். குறைந்தது 4 விசில் வரும் வரை அடுப்பில் வைக்கவும்
Image Source: istock
இப்போது மிக்ஸி ஜாரில் தேங்காய் துண்டுகள், தயிர், ப.மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்
Image Source: istock
வேகவைத்த அன்னாசிப்பழத்துடன் நாட்டு சர்க்கரையை சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்
Image Source: istock
இதில் அரைத்த தேங்காய் கலவை மற்றும் தேவையான அளவு உப்பை போட்டு சுமார் 10 நிமிடங்கள் மிதமான நெருப்பில் கொதிக்கவிடவும்
Image Source: istock
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகை தாளித்து, கொதிக்கும் கலவையில் சேர்க்க வேண்டும்
Image Source: istock
அவ்வளவு தான், அட்டகாசமான மதுரா பச்சடி தயார். இந்த உணவு கேரளா மற்றும் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான உணவாகும்
Image Source: istock
Thanks For Reading!