May 8, 2024
BY: Anojகேரளாவில் மட்டன் மப்பாஸ் மிகவும் பிரபலமான உணவாகும். பெரும்பாலும் இந்த உணவை கிறிஸ்துவ வீடுகளில் பண்டிகை நேரத்தில் செய்வார்கள். அதன் செய்முறையை இங்கு பார்க்கலாம்
Image Source: instagram-com/chef_pillai
நறுக்கிய மட்டன் - அரை கிலோ; இலங்கப்பட்டை - 1; பூண்டு - 4 பற்கள்; ஏலக்காய் - 4; நறுக்கிய வெங்காயம் - 2; இஞ்சி - 1 இன்ச்; பூண்டு - 4 பற்கள்; ப.மிளகாய் - 5; தக்காளி - 1; தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்; கறிவேப்பிலை - சிறிதளவு
Image Source: istock
உருளைக்கிழங்கு - 1; மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்; மிளகாய் பொடி - அரை டீஸ்பூன்; கொத்தமல்லி தூள் - 2 டீஸ்பூன்; பொடித்த மிளகு - அரை டீஸ்பூன்; கரம் மசாலா - அரை டீஸ்பூன்; கெட்டியான தேங்காய் பால் - 1 கப்; கொத்தமல்லி - சிறிதளவு; உப்பு - தேவைக்கேற்ப
Image Source: istock
முதலில் குக்கரில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு சில நிமிடங்கள் வதக்க வேண்டும்
Image Source: istock
அடுத்து, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து லேசாக வதக்கிவிட்டு, மஞ்சள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்
Image Source: istock
இப்போது நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் மட்டனை சேர்க்க வேண்டும். பின் பொடித்த மிளகு மற்றும் கரம் மசாலா சேர்த்து சுமார் 2 முதல் 3 நிமிடம் வதக்க வேண்டும்
Image Source: istock
அடுத்து, தேங்காய் பால் ஊற்றி நன்றாக கிளறிவிட்டு, நறுக்கிய தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பை சேர்க்க வேண்டும்
Image Source: istock
கலவை கொதிநிலைக்கு வந்ததும், குக்கரை மூடி சுமார் 4 விசில் வரும் வரை மிதமான நெருப்பில் வைக்க வேண்டும்
Image Source: pexels-com
இறுதியாக குக்கரை திறந்து கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை தூவினால் மட்டன் மப்பாஸ் ரெடி. இதை ஆப்பம், பிரெட் அல்லது இடியாப்பத்துக்கு தொட்டு சாப்பிடலாம்
Image Source: instagram-com/femina_shiraz
Thanks For Reading!