Apr 30, 2024
BY: mukesh Mகப்ப எனப்படும் மரவள்ளி கிழங்கு பயன்படுத்தி சுவையான இட்லி ஒன்றினை தயார் செய்வது எப்படி என இங்கு நாம் காணலாம்.
Image Source: istock
மரவள்ளி கிழங்கு - 250கி | இட்லி அரிசி - 2 கப் | உளுந்து - 1½ கப் | பூண்டு பல் - 8 | காய்ந்த மிளகாய் -5 | உப்பு - தேவையான அளவு
Image Source: istock
முதலில் எடுத்துக்கொண்ட அரிசி, உளுந்தை தண்ணீரில் அலசி சுத்தம் செய்து பின் பாத்திரம் ஒன்றில் போதுமான அளவு தண்ணீருடன் சேர்த்து 5 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
Image Source: pexels-com
பின் இந்த சேர்மத்தை ஒரு மிக்ஸி அல்லது கிரைண்டரில் சேர்த்து விழுதாக அரைத்து தனி ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
Image Source: istock
தொடர்ந்து இதே மிக்ஸி ஜாரில் பொடியாக நறுக்கப்பட்ட மரவள்ளிக்கிழங்கு, பூண்டு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து அரிசி மாவு உள்ள பாத்திரத்திற்கு மாற்றவும்.
Image Source: istock
தொடர்ந்து இதனுடன் உப்பு ஒரு சிட்டிகை அளவு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக்கொள்ள இட்லி மாவு ரெடி!
Image Source: istock
தற்போது இட்லி சுட்டு எடுக்க இட்லி பாத்திரத்தில் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.
Image Source: istock
தண்ணீர் நன்கு கொதிக்கும் நிலையில், இட்லி தட்டில் மாவை சேர்த்து - சட்டியில் வைத்து பதமாக அவித்து எடுக்க சுவையான கப்ப இட்லி தயார்!
Image Source: istock
பதமாக தயார் செய்த இந்த கப்ப இட்லியை ஒரு தட்டில் வைத்து உங்களுக்கு பிடித்தமான சட்னி, சாம்பாருடன் சேர்த்து ருசியாக பரிமாறவும்.
Image Source: istock
Thanks For Reading!