Jun 19, 2024
எண்ணற்ற வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த கேழ்வரகு மாவு பயன்படுத்தி குழிப்பணியாரம் ஒன்றினை தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!
Image Source: istock
கேழ்வரகு மாவு - 1 கப் | கோதுமை மாவு - ½ கப் | பேக்கிங் சோடா - 1 ஸ்பூன் | உப்பு - 1 சிட்டிகை | கடுகு - ½ ஸ்பூன் | பெருங்காயம் - ½ ஸ்பூன் | கறிவேப்பிலை - 1 கொத்து | வெங்காயம் - 2 | பச்சை மிளகாய் - 3 | உப்பு,, எண்ணெய் - தேவையான அளவு
Image Source: istock
முதலில் எடுத்துக்கொண்ட வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்கு பொடியாக நறுக்கி தனித்தனியே தயாராக எடுத்து வைக்கவும்.
Image Source: pexels-com
பின் அகன்ற பாத்திரம் ஒன்றில் கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, பேக்கிங் சோடா, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துக்கொள்ளவும்.
Image Source: istock
தொடர்ந்து இதனுடன் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து அரை திட நிலைக்கு கரைத்துக்கொள்ளவும்.
Image Source: istock
பின் தாளிப்பு பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெயுடன் கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
Image Source: istock
பின் இந்த தாளிப்பினை தயாராக கரைத்து வைத்த கேழ்வரகு மாவுடன் சேர்த்து கரைத்துவிட பணியாரம் மாவு ரெடி!
Image Source: istock
தற்போது பணியாரம் சட்டியை அடுப்பில் வைத்து சூடேற்றி, எண்ணெய் தேய்த்து தயார் செய்துக்கொள்ளவும்.
Image Source: istock
சட்டி தயாரான நிலையில், தயாராக கரைத்து வைத்த பணியார மாவை சேர்த்து பதமாக சுட்டு எடுக்க சுவையான ராகி மாவு பணியாரம் ரெடி!
Image Source: istock
Thanks For Reading!