[ad_1] கொங்குநாடு ஸ்பெஷல் 'பள்ளிபாளையம் சிக்கன்' செய்முறை

Jul 29, 2024

BY: Anoj, Samayam Tamil

கொங்குநாடு ஸ்பெஷல் 'பள்ளிபாளையம் சிக்கன்' செய்முறை

பள்ளிபாளையம் சிக்கன்

கோவை, ஈரோடு போன்ற பகுதிகளில் கொங்குநாடு உணவுகள் மிகவும் பிரபலமாகும். இந்தப் பதிவில், கொங்குநாடு ஸ்டைலில் பள்ளிபாளையம் சிக்கனை எப்படி செய்யலாம் என்பதை இங்கு பார்க்கலாம்

Image Source: pexels-com

தேவையான பொருட்கள்

சிக்கன் - அரை கிலோ; தேங்காய் - 2 துண்டுகள்; வர மிளகாய் - 2; சின்ன வெங்காயம் - 100 கிராம்; இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்; மஞ்சள் - 1 டீஸ்பூன்; கறிவேப்பிலை - சிறிதளவு

Image Source: istock

தேவையான பொருட்கள்

இஞ்சி - 1 இன்ச்; பூண்டு - 8 பற்கள்; ப.மிளகாய் - 2; கடுகு - 1 டீஸ்பூன்; சோம்பு - 1 டீஸ்பூன்; கொத்தமல்லி - சிறிதளவு; எண்ணெய் - தேவையான அளவு

Image Source: istock

செய்முறை படி - 1

முதலில் சிக்கனை நன்றாக வாஷ் செய்யவும். அதில் அரை டீஸ்பூன் மஞ்சள், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து ஊறவிடவும்.

Image Source: istock

செய்முறை படி - 2

இதற்கிடையில், மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு,ப.மிளகாய் மற்றும் அரை டீஸ்பூன் மஞ்சள் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ளவும்

Image Source: istock

செய்முறை படி - 3

இப்போது கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சோம்பு, விதை நீக்கிய வர மிளகாய், சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். அடுத்து, தேங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி கலவையில் சேர்த்து வதக்கவும்

Image Source: istock

செய்முறை படி - 4

அடுத்து, மிக்ஸியில் அரைத்த கலவை, உப்பு சேர்த்து வதக்கிவிட்டு ஊறவைத்த சிக்கன் துண்டுகளை சேர்க்க வேண்டும். சிக்கனில் மசாலா சேரும் வகையில் நன்றாக கிளற வேண்டும்

Image Source: istock

செய்முறை படி - 5

அதன் மீது கொத்தமல்லியை தூவிவிட்டு, தேவையான அளவு தண்ணீரை ஊற்றி சிக்கனை வேகவைக்க வேண்டும். கடாயை மூடி சுமார் 10 நிமிடம் அடுப்பில் வைத்திருக்க வேண்டும்

Image Source: istock

டேஸ்டி சிக்கன் ரெடி

அவ்வளவு தான், ருசியான பள்ளிபாளையம் சிக்கன் ரெடியாகிவிட்டது. இதை சாதத்துடன் பரிமாறினால் அட்டகாசமாக இருக்கக்கூடும்

Image Source: istock

Thanks For Reading!

Next: ஆடி மாத ஸ்பெஷல்.. சுவையான 'ஆடி பால் பாயாசம்' செய்முறை

[ad_2]