[ad_1] கொங்குநாட்டு ஸ்பெஷல் ‘தட்டை பயறு’ சாதம் செய்முறை!

May 18, 2024

BY: mukesh M

கொங்குநாட்டு ஸ்பெஷல் ‘தட்டை பயறு’ சாதம் செய்முறை!

தட்டை பயறு சாதம்!

கொங்கு நாட்டு மக்கள் விரும்பி சாப்பிடும் தட்டை பயறு சாதத்தை மிகவும் எளிமையான முறையில் நம் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி என இங்கு நாம் காணலாம்!

Image Source: istock

தேவையான பொருட்கள்!

அரிசி - 2 கப் | தட்டை பயறு - 1 கப் | நெய் - 2 ஸ்பூன் | பட்டை - 1 துண்டு | பிரியாணி இலை - 2 | சோம்பு - 1 ஸ்பூன் | கடுகு - ½ ஸ்பூன் | கடலை பருப்பு - 1 ஸ்பூன்

Image Source: istock

தேவையான பொருட்கள்!

சீரகம் - ½ ஸ்பூன் | சின்ன வெங்காயம் - 10 | இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் | தக்காளி - 2 | மஞ்சள் - 1 சிட்டிகை | சாம்பார் பொடி - 1 ஸ்பூன் | பச்சை மிளகாய் - 3 | உப்பு, எண்ணெய் - போதுமான அளவு

Image Source: istock

செய்முறை படி - 1

முதலில் எடுத்துக்கொண்ட அரிசியை அலசி சுத்தம் செய்து பின் மூழ்கும் அளவு தணீணீரில் 20 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். இதேப்போன்று தட்டை பயறையும் ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும்.

Image Source: istock

செய்முறை படி - 2

இதனிடையே எடுத்துக்கொண்ட சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்யவும். அதேநேரம் தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றையும் பொடியாக நறுக்கி தயாராக எடுத்து வைக்கவும்.

Image Source: pexels-com

செய்முறை படி - 3

தற்போது தட்டை பயறு சாதம் செய்ய குக்கர் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் நெய்யுடன் பட்டை, பிரியாணி இலை, சோம்பு, கடுகு, கடலை பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்கவும். பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

Image Source: istock

செய்முறை படி - 4

வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் அதில் தக்காளி, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும். தொடர்ந்து சாம்பார் பொடி, பச்சை மிளகாய், மிளகாய் பொடி, உப்பு, ஊற வைத்த தட்டை பயறு சேர்த்து 4 - 6 நிமிடங்களுக்கு வதக்கவும்.

Image Source: istock

செய்முறை படி - 5

மசாலாவின் பச்சை வாசம் நீங்கியதும் இதில் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

Image Source: istock

தட்டை பயறு சாதம் ரெடி!

தண்ணீர் நன்கு கொதிக்கும் நிலையில் ஊற வைத்து எடுத்த அரிசியை தண்ணீரில் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வர வேக வைத்து அடுப்பில் இருந்து இறக்க சுவையான தட்டை பயறு சாதம் ரெடி!

Image Source: istock

Thanks For Reading!

Next: Gym பிரியர்கள் சாப்பிட வேண்டிய High Protein பிரியாணி!

[ad_2]