Jul 18, 2024
கொங்கு நாட்டு ஸ்பெஷல் காளான் குருமாவை நம் வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் தயார் செய்வது எப்படி என இங்கு நாம் காணலாம்!
Image Source: istock
வெங்காயம் - 4 | பூண்டு பல் - 6 | எண்ணெய் - 1 கப் | சீரகம் - 1 ஸ்பூன் | மிளகு - 1 ஸ்பூன் | முந்திரி - 4 | மஞ்சள் - 1 ஸ்பூன் | கரம் மசாலா - 1 ஸ்பூன்
Image Source: istock
கடுகு - 1 ஸ்பூன் | கறிவேப்பிலை - 1 கொத்து | பச்சை மிளகாய் - 2 | தக்காளி - 2 | உப்பு - 2 ஸ்பூன் | காளான் - 100கி | கொத்தமல்லி தழை - 1 கொத்து
Image Source: istock
முதலில் எடுத்துக்கொண்ட காளான், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்கு பொடியாக நறுக்கி தனித்தனியே தயாராக எடுத்து வைக்கவும்.
Image Source: pexels-com
தற்போது கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெயுடன் வெங்காயம், பூண்டு பல், சீரகம் சேர்த்து வறுத்து எடுத்து - ஆறவிட்டு மிக்ஸி ஜார் ஒன்றுக்கு மாற்றவும்.
Image Source: istock
பின் இதனுடன் சீரகம், மிளகு, முந்திரி பருப்பு, மஞ்சள், கரம் மசாலா, மிளகாய் பொடி மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
Image Source: istock
தற்போது குருமா தயார் செய்ய கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெயுடன் கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
Image Source: istock
பின் இதனுடன் தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். தங்காளி நன்கு மசியும் நிலையில் மிக்ஸியில் அரைத்த சேர்மம், உப்பு மற்றும் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்!
Image Source: istock
இச்சேர்மம் நன்கு கொதிக்கும் நிலையில் இதில் காளான் சேர்த்து 7 - 10 நிமிடங்கள் வரை வேக வைக்கவும். பின் இதனுடன் கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கிவிட காளான் கிரேவி ரெடி!
Image Source: istock
Thanks For Reading!