May 20, 2024
கொசுக்கடியை தவிர்க்க தற்போது சந்தைகளில் பலவித ஆயில்மென்ட்கள் கிடைக்கின்றன; இருப்பினும் இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை இதற்கு பயன்படுத்துவதே நல்லது. எனவே, கொசு கடியில் இருந்து தப்பிக்க உதவும் சில இயற்கை எண்ணெய்கள் பற்றி இங்கு காணலாம்!
Image Source: istock
லாவண்டர் எண்ணெயில் பூச்சிக்கடிகளை குணப்படுத்தக்கூடிய பண்புகள் உள்ளன. அதே போல் கொசுக்கள் கடிக்காமல் இருக்கவும் அது உதவுகிறது. இதிலிருந்து வரக்கூடிய தனித்துவமான வாசனை கொசுக்கள் மற்றும் பூச்சிகள் நம்மை அண்டவிடாமல் தடுக்கும்.
Image Source: istock
புதினாவில் உள்ள பண்புகள் கொசுக்களை விரட்டும் தன்மை கொண்டவை. கொசு கடிப்பதை தடுக்க இந்த எண்ணெய் உதவும். இதன் புத்துணர்ச்சி ஊட்டும் நறுமணம் மற்றும் அதன் குளிர்ந்த தன்மை ஆகியவை சருமத்திற்கும் ஏற்றது.
Image Source: istock
துளசி செடி பெரும்பாலானோர் வீட்டில் இருக்கிறது. இதன் மருத்துவ குணங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. துளசி எண்ணெய்யை இயற்கையான கொசு விரட்டியாக பயன்படுத்தலாம்.
Image Source: istock
டீ ட்ரீ எண்ணெய் தனித்துவமான வாசனையை கொண்டது. இதனால் கொசுக்கள் உங்களை கடிக்காது. எனவே, கொசுக்கடியில் இருந்து தப்பிக்க தேயிலை இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்களை பயன்படுத்தலாம்.
Image Source: istock
பெரும்பாலும் சமையல்களில் ரோஸ்மேரி சேர்த்துக் கொள்ளப்படுகிறது. ரோஸ்மேரி எண்ணெய் கொசுக்கடியில் இருந்து பாதுகாக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனை தனியாக பயன்படுத்தாமல் தேங்காய் எண்ணெய் போன்ற மற்ற பயன்படுத்தும் எண்ணெய்களுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.
Image Source: istock
கிராம்பு நல்ல நறுமணத்தை கொண்டது. இது பெரும்பாலும் சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை. கொசுக்களை விரட்ட கிராம்பை பயன்படுத்தலாம். கிராம்பு எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தி உடலில் பூசிக்கொள்ளலாம்
Image Source: istock
வேப்ப எண்ணெய் மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ஒரு வகை தாவரம். இது சருமத்திற்கு நன்மை பயக்கும் பல பண்புகளை கொண்டுள்ளது. கொசுவை விரட்ட வேப்ப எண்ணெயை பயன்படுத்தலாம். வேப்ப வேப்ப எண்ணெய்யை நீருடன் கலந்து பயன்படுத்த வேண்டும்.
Image Source: istock
இந்த எண்ணெய்களை நேரடியாக உடலில் பயன்படுத்தக் கூடாது. இதனுடன் தண்ணி அல்லது தேங்காய் எண்ணெய் போன்ற மற்ற எண்ணெய்களுடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும். குழந்தைகள் இதை பயன்படுத்துவதை தவிர்க்கவும்!
Image Source: pexels-com
Thanks For Reading!