Jun 1, 2024
சிக்கன் / மட்டன் பிரியாணியின் சுவைக்கு ஈடு கொடுக்கும் வெஜ் பிரியாணி ஒன்றினை கொண்டைக்கடலை பயன்படுத்தி தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!
Image Source: istock
கொண்டைக்கடலை - 2 கப் | பட்டை - 1 | லவங்கம் பூ - 2 | கிராம்பூ - 2 | பே இலை - 1 | அன்னாசி பூ - 1 | வெங்காயம் - 2 | பச்சை மிளகாய் - 3 | இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் | புதினா, கொத்தமல்லி - 1 கொத்து
Image Source: istock
மிளகாய் பொடி - 1 ஸ்பூன் | தக்காளி - 2 | பிரியாணி மசாலா - 1 ஸ்பூன் | மஞ்சள் - 1 சிட்டிகை | தயிர் - 1 கப் | அரிசி - 2 கப் | நெய் - 1 கப் | உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
Image Source: istock
முதலில் எடுத்துக்கொண்ட கொண்டைக்கடலையை ஒரு பாத்திரத்தில் போதுமான அளவு தண்ணீருடன் 8 மணி நேரம் வரை ஊற வைக்கவும். இதேப்போன்று அரிசியை அலசி 30 நிமிடங்கள் வரை ஊர வைத்து பயன்படுத்தவும்.
Image Source: istock
பிரியாணி தயார் செய்வதற்கு முன் எடுத்துக்கொண்ட வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை நன்கு பொடியாக நறுக்கி தனித்தனியே தயாராக எடுத்து வைக்கவும்.
Image Source: pexels-com
தற்போது பிரியாணி தயார் செய்ய குக்கர் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெயுடன் பட்டை, கிராம்பு, லவங்கம், பே இலை, அன்னாசி பூ, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
Image Source: istock
தொடர்ந்து தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள், பிரியாணி மசாலா, மிளகாய் பொடி, உப்பு, புதினா, கொத்தமல்லி தழைகளை சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.
Image Source: istock
தக்காளி நன்கு மசிந்த நிலையில் இதில் கொண்டைக்கடலை, தயிர், நெய் ஆகியவற்றையும் சேர்த்து வதக்கி பின் 3 கப் அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
Image Source: istock
தண்ணீர் நன்கு கொதிக்கும் நிலையில் ஊற வைத்து எடுத்த அரிசியை இதில் சேர்த்து கிளறி 3 விசில் வர வேக வைத்து இறக்க சுவையான கொண்டைக்கடலை பிரியாணி ரெடி!
Image Source: istock
Thanks For Reading!