May 10, 2024
வாழைக்காய் பஜ்ஜி, உருளைக்கிழங்கு பஜ்ஜி என வழக்கமான பஜ்ஜி செய்வதற்கு பதில் கொத்தமல்லி தழை பயன்படுத்தி வித்தியாசமான முறையில் பஜ்ஜி ஒன்றினை தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்.
Image Source: instagram-com
கடலை மாவு - 1 கப் | அரிசி மாவு - ½ கப் | மஞ்சள் - ½ ஸ்பூன் | மிளகாய் பொடி - ½ ஸ்பூன் | பெருங்காயம் - 1 சிட்டிகை | பேக்கிங் சோடா - ½ ஸ்பூன் | சீரகம் - 1 ஸ்பூன் | உப்பு, எண்ணெய் - தேவையான அளவு | கொத்தமல்லி தழை - 5 கொத்து
Image Source: istock
முதலில் எடுத்துக்கொண்ட கடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றை ஒரு சல்லடை கொண்டு சலித்து தூசி நீக்கி சுத்தம் செய்து தனி ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
Image Source: pexels-com
பின் இதனுடன் மஞ்சள், மிளகாய் பொடி, பெருங்காய பொடி, பேக்கிங் சோடா, சீரகம், உப்பு சேர்த்து நன்கு ஒரு முறை கலந்துக்கொள்ளவும்.
Image Source: istock
பின் இதனுடன் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து அரை கூழ்ம நிலைக்கு கரைத்துக்கொள்ள பஜ்ஜி மிக்ஸ் ரெடி!
Image Source: istock
இதனிடையே எடுத்துக்கொண்ட கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து தனித்தனி கொத்துக்களாக பிரித்து எடுத்து தயாராக வைக்கவும்.
Image Source: istock
தற்போது பஜ்ஜி சுட்டு எடுக்க கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் போதுமான அளவு எண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
Image Source: istock
பின் தயாராக உள்ள கொத்தமல்லி கொத்துக்களை பஜ்ஜி மிக்ஸியில் நன்கு முக்கி எடுத்து, கொதிக்கும் எண்ணெயில் சேர்த்து பதமாக பொரித்து எடுக்க சுவையான பஜ்ஜி ரெடி!
Image Source: istock
பதமாக பொரித்து எடுத்த இந்த கொத்தமல்லி தழை பஜ்ஜியினை உங்களுக்கு பிடித்தமான சட்னி, சாஸுடன் சேர்த்து ருசியாக பரிமாறவும்!
Image Source: instagram-com
Thanks For Reading!