Aug 16, 2024
பழங்கள் என்றாலே உடல் ஆரோக்கியத்திற்கு நன்மைகளை பயக்க கூடியது தான். அதிலும் ஒரு சில பழங்கள் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஒரு சில நோய்களையும் தீர்க்க வல்லது.
Image Source: istock
கொய்யாப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது என்று அனைவருக்கும் தெரிந்ததே. அதே சமயம், இப்பழத்தில் பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம், வைட்டமின் பி6, புரதம், கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
Image Source: istock
ஒரு நூறு கிராம் கொய்யாப்பழத்தில் முந்நூறு மில்லி கிராம் அஸ்கார்பிக் அமிலம் இருக்கிறது என்று கூறப்படுகிறது. அஸ்கார்பிக் அமிலம் என்பது வைட்டமின் சி-யை குறிப்பதாகும். மேலும் கொய்யாப்பழம் வயிறு சார்ந்த பிரச்சனைகளை தீர்க்க பெரிதும் உதவுகிறது.
Image Source: istock
இது தவிர கொய்யாப்பழத்தில் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுக்கள் மற்றும் பைட்டோநியூட்ரியன்கள் நிறைந்துள்ளன. இது உடல்நலம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க பயன்படுகிறது.
Image Source: istock
கொய்யாப்பழத்தை உட்கொள்வதன் மூலம் செரிமான அமைப்பில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அதன்படி, இதன் பயன்பாடுகள் மற்றும் எந்நேரத்தில் இப்பழத்தை உட்கொள்வது அதிகளவு மருத்துவ பலனை அளிக்கும் என்பதை தான் இப்பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
Image Source: istock
ஏற்கனவே கூறியது போல் கொய்யாவில் நார்ச்சத்து அதிகமுள்ளது என்பதால் இது செரிமானத்திற்கு மிகவும் உதவுகிறது. ஒருசிலருக்கு கொய்யாவை அதன் விதைகளோடு சாப்பிட்டால் வயிறு வலி ஏற்படக்கூடும். எனவே அவர்கள் விதைகளை நீக்கிவிட்டு சாப்பிடுவது நல்லது. மேலும் கொய்யாவை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலும் வயிறு வலி ஏற்படும்.
Image Source: istock
கொய்யாப்பழத்தில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கி செரிமானத்தையும் மேம்படுத்தும் என்பதால் மருத்துவர்களும் இதனை சாப்பிடுமாறு பரிந்துரை செய்கிறார்கள். மேலும் கொய்யாப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூலத்திற்கு நல்லது.
Image Source: istock
கொய்யாப்பழம் இயற்கையாகவே அமிலத்தன்மை நிறைந்தது. இதனை உட்கொள்ளும் பட்சத்தில் வாயு, அசிடிட்டி போன்ற கோளாறுகள் குணமாகும். வாயுவை வெளியேற்றுவதில் கொய்யாப்பழம் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடவேண்டியவை.
Image Source: istock
பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பிய கொய்யாப்பழத்தை மாலையிலும், இரவிலும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் செரிமானமாக நேரம் எடுக்கும், அதே போல் இப்பழத்தை காலை மற்றும் மதிய வேளையில் சாப்பிட்டால் நல்லது. குறிப்பாக மதிய உணவு சாப்பிட்டு ஒன்றரை மணிநேரம் கழித்து கொய்யா சாப்பிட்டால் வயிறு சார்ந்த பல்வேறு பிரச்சனைகளும் தீரும் என்று கூறப்படுகிறது.
Image Source: pexels
Thanks For Reading!