Jun 5, 2024
BY: mukesh Mநூடுல்ஸ் என்றாலே குழந்தைகள் அதனை விரும்பி சாப்பிடுவர். ஆனால் கடைகளில் கிடைக்கும் இதர நூடுல்ஸ்களில் ப்ரிசர்வேட்டிவ்கள், மெழுகு உள்ளிட்டவை சேர்க்கப்படுகிறது என்று கூறப்படுவதால் பெற்றோர்கள் அதனை குழந்தைகளுக்கு ஒருவித தயக்கத்துடன் தான் கொடுக்கிறார்கள்.
Image Source: pixabay
ஆனால் பெற்றோர்கள் இனி குழந்தைகளுக்கு எவ்வித தயக்கமுமின்றி ப்ரிசர்வேட்டிவ்கள் சேர்க்கப்படாத சிறுதானியங்களுள் ஒன்றான கொள்ளு நூடுல்ஸை கொடுக்கலாம். இது குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தையும் அளிக்கும்.
Image Source: pexels-com
ஒரு பாக்கெட் கொள்ளு நூடுல்ஸை ஒரு லிட்டர் தண்ணீரில் வேகவைத்து 3 நிமிடங்கள் வேகவைத்து தண்ணீரை வடித்து எடுத்து வைத்து கொள்ளவும்.
Image Source: pexels-com
அடுத்து அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் சிறிதளவு வெண்ணெய் கட்டியை போட்டு அதில் பன்னீர் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுத்து தனியே எடுத்து வைத்து கொள்ளவும்.
Image Source: pixabay
மீண்டும் அடுப்பில் வாணலியை வைத்து சிறிதளவு வெண்ணெய் கட்டியை அதில் சேர்த்து உருகியதும் தோலுரித்து வைத்துள்ள பூண்டுகள் 4-5 பற்களை சேர்த்து வதக்கி கொள்ளவும்.
Image Source: pexels-com
பூண்டு வதங்கியதும் சிறிதளவு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி பொன்னிறமாக மாறிய பின்னர், தங்கள் விருப்பத்திற்கேற்ப கேரட், பீன்ஸ், முட்டை கோஸ் போன்ற நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வேக விடவும்.
Image Source: pexels-com
காய்கறிகள் ஓரளவு வதங்கிய பிறகு நமது தேவைக்கேற்ப நூடுல்ஸ் பாக்கெட்டில் கொடுக்கப்பட்டுள்ள டேஸ்ட் மேக்கர் மசாலாவை சேர்த்து ஒருசேர கிளறி விடவும்.
Image Source: pexels-com
பின்னர் ஏற்கனவே வேகவைத்து எடுத்துவைத்த நூடுல்ஸ், வறுத்த பன்னீர் ஆகியவற்றை அதில் சேர்த்து அதில் சிறிதளவு தக்காளி சாஸ் ஊற்றி மீண்டும் ஒருசேர நன்கு கிளறவும்.
Image Source: pexels-com
அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியமான கொள்ளு நூடுல்ஸ் ரெடி. இதனை குழந்தைகளுக்கு காலை உணவாக கொடுக்கலாம்.
Image Source: pexels-com
Thanks For Reading!