[ad_1] கோடிக்கணக்கில் சொத்து மதிப்பு.. உலகின் பணக்கார கிரிக்கெட் வீராங்கனை யார் தெரியுமா?

கோடிக்கணக்கில் சொத்து மதிப்பு.. உலகின் பணக்கார கிரிக்கெட் வீராங்கனை யார் தெரியுமா?

Anoj, Samayam Tamil

Jul 26, 2024

எல்லிஸ் பெர்ரி

எல்லிஸ் பெர்ரி

ஆஸ்திரிலேயா மகளிர் அணியின் ஆல்ரவுண்டர் எல்லிஸ் பெர்ரி, உலகின் பணக்கார கிரிக்கெட் வீராங்கனையாக திகழ்கிறார். அவரது சொத்து மதிப்பு 14 மில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆண்டிற்கு ஒரு கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுகிறார்

Image Source: instagram-com/ellyseperry

மெக் லானிங்

ஆஸ்திரேலியா மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மெக் லானிங் சொத்து மதிப்பு 9 மில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவரது தலைமையில் ஆஸ்திரேலியா அணி 5 உலக கோப்பைகளை வென்றுள்ளது

Image Source: instagram-com/meglanning7

மிதாலி ராஜ்

இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், பணக்கார வீராங்கனை பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு 5 மில்லியன் டாலர் ஆகும். பிசிசிஐ ஒப்பந்தத்தில் ஆண்டிற்கு ரூ.30 லட்சம் சம்பளமாக பெறுகிறார்

Image Source: instagram-com/mithaliraj

ஸ்மிருதி மந்தனா

இந்திய மகளிர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா, ஆண்டிற்கு ரூ.50 லட்சம் சம்பளமாக பெறுகிறார். அவரது சொத்து மதிப்பு 4 மில்லியன் டாலர் ஆகும். இவரை ஐபிஎல்லில் ஆர்சிபி அணி ரூ.3.4 கோடிக்கு ஏலம் எடுத்தது

Image Source: instagram-com/smriti_mandhana

ஹர்மன்பிரீத் கவுர்

இந்திய மகளிர் அணியை அனைத்து போட்டிகளிலும் வழிநடத்தும் ஹர்மன்பிரீத் கவுரின் சொத்து மதிப்பு 3 மில்லியன் டாலர் ஆகும். இவருக்கு பிசிசிஐ ஆண்டிற்கு ரூ.50 லட்சம் சம்பளம் அளிக்கிறது. இவரை ஐபிஎல்லில் மும்பை அணி ரூ.1.80 கோடிக்கு ஏலம் எடுத்தது

Image Source: instagram-com

சாரா டெய்லர்

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் சிறந்த விக்கெட் கீப்பரான சாரா டெய்லர், உலகின் பணக்கார வீராங்கனை பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அவருடைய சொத்து மதிப்பு 2 மில்லியன் டாலர் ஆகும். இவர் ஆண்டிற்கு குறைந்தது ரூ.50 லட்சம் வருமானம் ஈட்டுகிறார்

Image Source: instagram-com/sjtaylor30

ஹோலி ஃபெர்லிங்

உலகின் பணக்கார கிரிக்கெட் வீராங்கனை பட்டியலில், ஆஸ்திரேலியாவின் மற்றொரு ஆல்ரவுண்டரும் இடம்பெற்றுள்ளார். இவரது சொத்து மதிப்பு 1.5 மில்லியன் டாலர் ஆகும்.

Image Source: instagram-com/hollyferling

இசா குஹா

இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இசா குஹா, 2001 முதல் 2011 வரை இங்கிலாந்து மகளிர் அணிக்காக விளையாடினார். 1.5 மில்லியன் டாலர் சொத்து மதிப்பை கொண்டிருக்கும் இசா, தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக பணிபுரிகிறார்

Image Source: instagram-com/isaguha

சனா மிர்

பாகிஸ்தான் மகளிர் அணியின் பொக்கிஷமாக கருதப்பட்டவர் சனா மிர். 2020ல் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இவரது சொத்து மதிப்பு 1.3 மில்லியன் டாலர் ஆகும். இவர் ஆண்டிற்கு ரூ.62 லட்சம் வருமானம் ஈட்டுகிறார்

Image Source: instagram-com/mir-sana05

Thanks For Reading!

Next: Paris Olympics 2024-ல் பங்கேற்கும் இளம் போட்டியாளர்கள்!

[ad_2]