[ad_1] கோடையில் உங்கள் இதயத்தை பாதுகாக்க உதவும் உடற் பயிற்சி!

Jun 1, 2024

கோடையில் உங்கள் இதயத்தை பாதுகாக்க உதவும் உடற் பயிற்சி!

mukesh M

இதயத்தை காக்கும் பயிற்சிகள்!

இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க பல வழிகள் இருந்தாலும்; கார்டியாவாஸ்குலர் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நிபுணர்கள் குறிப்பிடும் நிலையில் அந்த ஒரு சில கார்டியாவாஸ்குலர் பயிற்சிகள் பற்றி இங்கு காணலாம்.

Image Source: istock

ஓட்ட பயிற்சி!

ஓட்ட பயிற்சி இதய தசைகளை பலப்படுத்த உதவுகிறது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. கோடையில் மாலை நேரங்களில் நீங்கள் இதுபோன்ற ஓட்ட பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

Image Source: istock

சைக்கிள் ஓட்டுதல்

கோடைகாலங்களில் குறைந்த தூர பயணங்களுக்கு நீங்கள் சைக்கிளை பயன்படுத்தலாம். சைக்கிள் ஓட்டுவதும் உடற்பயிற்சி செய்வதை போன்றது தான். இது இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைத்து இதய ஆரோக்கியம் காக்கிறது.

Image Source: istock

ஸ்கிப்பிங்

ஸ்கிப்பிங் போன்ற உடற்பயிற்சிகள் உடலுக்கு இயக்கத்தை தருவதோடு மட்டுமல்லாமல் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. உடலில் உள்ள கலோரிகளை எரிப்பதற்கு இது போன்ற பயிற்சிகள் உதவுகின்றன.

Image Source: pexels-com

நீச்சல் பயிற்சி

கோடை காலத்துக்கு ஏற்ற ஒரு பயிற்சியாக நீச்சல் பயிற்சி உள்ளது. இது இதய தசைகளை பலப்படுத்த உதவுகிறது. நமது உடல் ஆரோக்கியமாக மற்றும் சுறுசுறுப்பாக இருப்பதற்கு நீச்சல் பயிற்சி மிகவும் உதவுகிறது.

Image Source: istock

நடைப்பயிற்சி

தினசரி மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகளில் மிக முக்கியமான உடற்பயிற்சியாக நடை பயிற்சி உள்ளது. இது நமது கால் தசைகளை பலப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மன அழுத்தத்தை குறைத்து இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

Image Source: istock

நடன பயிற்சி

உங்களுக்கு ஆடுவதில் விருப்பம் இருந்தால் தினசரி நடன பயிற்சி கூட மேற்கொள்ளலாம். தினசரி நடன பயிற்சி செய்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உடல் எடையை பராமரிக்கவும் உதவுகிறது.

Image Source: istock

டென்னிஸ்

எல்லா கால நிலைகளுக்கும் ஏற்ற ஒரு பயிற்சியாக டென்னிஸ் உள்ளது. இது உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. கோடை காலங்களில் உட்புற டென்னஸ் அரங்குகளில் நீங்கள் இந்த பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

Image Source: istock

ஏரோபிக் பயிற்சிகள்

கோடை காலத்தில் ஏரோபிக் பயிற்சிகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும் என நம்பப்படுகிறது. இது நுரையீரலின் ஆற்றலை அதிகரித்து உடல் ஆரோக்கியத்தை பேணிக்காக்கிறது.

Image Source: istock

Thanks For Reading!

Next: நீரிழிவு நோயாளிகள் திராட்சை சாப்பிடலாமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

[ad_2]