[ad_1] கோடையில் குழந்தைகளுடன் சுற்றுலா செல்ல ஏற்ற இடங்கள் இதோ!

May 9, 2024

கோடையில் குழந்தைகளுடன் சுற்றுலா செல்ல ஏற்ற இடங்கள் இதோ!

mukesh M

குழந்தைகள் விரும்பும் சுற்றுலா!

கோடை விடுமுறைகள் துவங்கி விட்ட நிலையில் பெற்றோர்கள் குழந்தைகளை சுற்றுலா அழைத்துச் செல்ல விரும்புவார்கள். இந்நிலையில், குழந்தைகளுக்கு பிடித்த கோடை விடுமுறைக்கான சில பிரபலமான வெளிநாட்டு சுற்றுலா தலங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

Image Source: unsplash-com

பாலி

அழகிய கடற்கரைகள் பசுமையான இயற்கை காட்சிகள் மற்றும் வளமான கலாச்சாரம் ஆகியவற்றிற்கு பிரபலமானது இந்த பாலி கோடை காலத்தில் உங்கள் குழந்தைகளுடன் ஓய்வெடுக்க ஒரு சிறந்த இடம் இது.

Image Source: unsplash-com

துபாய்

துபாயில் உள்ள மிக பிரபலமான உயரமான கட்டிடம் புர்ஜ் கலிஃபா. அதே போல துபாய் மால்களில் அமைந்துள்ள மீன் கண்காட்சியும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும்.

Image Source: unsplash-com

சிங்கப்பூர்

சிங்க நகரம் என்று அழைக்கப்படும் சிங்கப்பூர் குடும்பங்களுடன் சுற்றுலா செல்ல ஒரு சிறந்த தளம். இங்கு நீங்கள் இரவு சஃபாரிக்கு சென்று பல விலங்குகளை நேரில் பார்க்கலாம் மற்றும் அங்குள்ள யுனிவர்சல் ஸ்டூடியோவில் குழந்தைகளுடன் சுற்றிப் பார்க்கலாம்.

Image Source: pexels-com

புக்கெட்

உங்கள் குழந்தைகளுக்கு கடற்கரை மிகவும் பிடிக்கும் என்றால் இந்த புக்கெட் ஒரு சிறந்த சுற்றுலா தளமாக இருக்கும். அதே போல இங்குள்ள யானைகள் சரணாலயத்தில் விளையாட்டுத்தனமான யானைகளை நீங்கள் சந்திக்கலாம்.

Image Source: unsplash-com

டோக்கியோ

ஜப்பான் நகரத்தின் தலைநகரமான டோக்கியோ அதன் பாரம்பரிய கலாச்சாரத்திற்கு மிகவும் பிரபலமானது. இங்கு டிஸ்னி லேண்ட் மற்றும் டோக்கியோ டிஸ்னிசீ போன்ற குழந்தைகளுக்கான அம்யூஸ்மென்ட் தீம் பார்க்குகள் உள்ளது.

Image Source: unsplash-com

பார்சிலோனா

எப்போதும் பிசியாக இருக்கும் தெருக்கள், பிரம்மாண்டமான கட்டிடங்கள் மற்றும் அழகான கடற்கரைகளுக்கு மிகவும் பிரபலமானது பார்சிலோனா. கோடை விடுமுறையில் உங்கள் குழந்தைகளுடன் சுற்றுலா செல்ல ஒரு சிறந்த தளம் இது.

Image Source: unsplash-com

சிட்னி

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி அதன் கலாச்சாரத்திற்கும் உணவிற்கும் மிகவும் பிரபலமானது. குழந்தைகள் சிட்னி துறைமுக பாலத்தின் மீது ஏறி அற்புதமான ஆஸ்திரேலிய நகரத்தின் காட்சிகளை காண முடியும்.

Image Source: unsplash-com

மொரிஷியஸ்

மூன்று பக்கமும் கடற்கரை அதற்கு நடுவில் அடர்ந்த காடு என்று பார்க்கவே பிரம்மாண்ட அழகாக அமைந்துள்ள இடம் மொரிஷியஸ். இங்கு நீங்கள் பல வண்ணமயமான மீன்களும் டால்ஃபின்களும் பார்க்கலாம்.

Image Source: unsplash-com

Thanks For Reading!

Next: சதுப்பு நில காடுகளின் சொர்க்க பூமி.. பிச்சாவரம் பற்றி தெரியுமா?

[ad_2]