May 15, 2024
BY: Anojஆரஞ்சு பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. அதை பயன்படுத்தி கோடை காலத்தில் குழந்தைகள் வீட்டிலேயே ஆரோக்கியமான ஐஸ்கிரீமை ரெடி செய்து கொடுங்கள். அதன் செய்முறையை இங்க பார்க்கலாம்
Image Source: pexels-com
ஆரஞ்சு - 3; பால் - கால் லிட்டர்; சோள மாவு - 2 டீஸ்பூன், சர்க்கரை - கால் கப்; பிரஷ் க்ரீம் - 1 கப்; ஆரஞ்சு எசன்ஸ் - 1 டீஸ்பூன்; கண்டன்ஸ்டு மில்க் - 2 டீஸ்பூன்; நறுக்கிய பாதாம் - சிறிதளவு
Image Source: istock
முதலில் பிரஷ் ஆரஞ்சு பழத்தின் தோலை நீக்கி, மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து, அதன் சாறை தனியாக வடிகட்டி எடுக்கவும்
Image Source: istock
பிறகு, அடுப்பில் பாத்திரத்தில் வைத்து பால், சர்க்கரை மற்றும் சோள மாவை சேர்த்து கெட்டியாகும் வரை கிளறிவிட்டு அடுப்பை அணைக்கவும்
Image Source: istock
கலவை ஆறியதும் ஆரஞ்சு ஜூஸை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்துவிடவும்
Image Source: istock
இதற்கிடையில், ஒரு பவுலில் பிரஷ் க்ரீம் மற்றும் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாக கலக்கி கிரீமி பதத்திற்கு கொண்டு வர வேண்டும்
Image Source: pexels-com
இப்போது ஆரஞ்சு சாறு மிக்ஸ் செய்த கலவையில் ஆரஞ்சு எசன்ஸ் மற்றும் கிரீமி பாலை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்
Image Source: istock
அடுத்து பவுலை மூடி பிரிட்ஜில் 4 முதல் 5 மணி நேரமாவது வைத்து ஃப்ரீஸ் செய்ய வேண்டும்
Image Source: istock
பிறகு, கலவையை வெளியே எடுத்து பொடித்த பாதாமை தூவினால் சுவையான ஆரஞ்சு ஐஸ்கிரீம் ரெடி
Image Source: instagram-com/melissasproduce
Thanks For Reading!