May 9, 2024
மென்மையான க்ளீன்சரைக் கொண்டு உங்கள் முகத்தை இரண்டு முறை சுத்தம் செய்யுங்கள். இது அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்குகளை நீக்க பயன்படுகிறது.
Image Source: istock
எண்ணெய் சருமம் உள்ளவர்கள் எண்ணெயை உறிஞ்சும் ஷீட்களை உடன் வைத்துக் கொள்ளலாம். அவ்வப்போது இந்த ஷீட்டைக் கொண்டு முகத்தை துடைத்து எடுங்கள். இது சருமத்தை பொலிவாக்க உதவுகிறது.
Image Source: istock
சருமத்தின் மீதுள்ள இறந்த செல்களை நீக்க எக்ஸ்ஃபோலியண்ட் செய்வது அவசியம். லாவெண்டர் மற்றும் ஜெரனியம் எண்ணெய்களை தேர்ந்தெடுங்கள்.
Image Source: istock
எண்ணெய் பசை சருமம் இருப்பவர்கள் சன்ஸ்க்ரீனை தவிர்க்காதீர்கள். தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்வீச்சில் இருந்து சருமத்தை காக்க SPF 30 யை பயன்படுத்துங்கள்.
Image Source: istock
உங்கள் சருமம் எண்ணெய் பசை சருமமாக இருந்தால் கூட நீரேற்றம் செய்வது மிகவும் அவசியம். காமெடோஜெனிக் அல்லாத மாய்ஸ்சரைசரை பயன்படுத்துங்கள். நீர் சார்ந்த அல்லது ஜெல் மாய்ஸ்சரைசரை கூட பயன்படுத்தலாம்.
Image Source: pexels-com
மேக்கப் போடுவதற்கு முன்பு அதிகப்படியான எண்ணெயை கட்டுப்படுத்த ப்ரைமரை பயன்படுத்துங்கள். சிலிக்கா அல்லது டைமெதிகோன் கொண்ட ப்ரைமரை தேர்ந்தெடுங்கள். இது எண்ணெயை உறிஞ்ச பயன்படுகிறது. லெமன் கிராஸ் எண்ணெயைக் கூட பயன்படுத்தலாம்.
Image Source: istock
டீ ட்ரீ ஆயில் கொண்டு உங்கள் முகப்பருக்களை போக்க முடியும். இது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. முகப்பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்திட பயன்படுகிறது.
Image Source: istock
சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைக்கவும், ஹைட்ரேட்டிங் செய்யவும் ஃபேசியல் மிஸ்ட் பயன்படுகிறது. ஃபேசியல் மிஸ்ட்டுடன் சில துளிகள் டீ ட்ரி எண்ணெயை சேர்ப்பது நல்லது.
Image Source: istock
பழங்கள், காய்கறிகள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சமச்சீரான உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமான சருமத்தை பெற முடியும்.
Image Source: istock
Thanks For Reading!