[ad_1] கோடை காலத்தில் ஏன் புளிச்சாறை குடிக்க வேண்டும்?

May 11, 2024

கோடை காலத்தில் ஏன் புளிச்சாறை குடிக்க வேண்டும்?

mukesh M

கோடையில் புளிச்சாறு!

கோடைகாலத்தில் வெப்பநிலை காரணமாக நமது உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்நிலையில் இந்த மாற்றங்களை சமாளிக்க புளிச்சாற்றை பருகலாமா? கோடையில் புளிச்சாறு அளிக்கும் நன்மை என்ன? தீமை என்ன? என்று இங்கு காணலாம்!

Image Source: istock

சூடு கட்டிகளை தடுக்கும்!

புளிச்சாறில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளது. புளி சாற்றை குடிப்பது வீக்கம் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது. மேலும் கீல்வாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

Image Source: istock

உஷ்ணத்தை குறைக்கும்!

புளிச்சாறுக்கு இயற்கையாகவே குளிர்ச்சி ஊட்டும் தன்மை உள்ளது. இது நமது உடல் வெப்பநிலையை அதிகரிக்காமல் சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே கோடைகால வெப்பநிலையை சமாளிக்க புளிச்சாறு அவசியம்.

Image Source: istock

புத்துணர்ச்சி அளிக்கும்!

புளிச்சாறில் பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் நிரம்பியுள்ளது. இது நமது உடலில் திரவத்தை சமநிலைப்படுத்தி நரம்பு மற்றும் தசை தளர்வுக்கு உதவி, நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்கிறது.

Image Source: istock

நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவும்!

புளிச்சாறில் வைட்டமின் சி அதிக அளவில் நிரம்பியுள்ளது. இது நமது உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்து, கோடையில் உண்டாகும் கிருமி தொற்றுகளை தடுக்கிறது!

Image Source: istock

செரிமான நன்மைகள்!

புளிச்சாறில் இயற்கையாகவே செரிமானம் செய்யும் என்சைம்களும், நார்ச்சத்துக்களும் நிரம்பியுள்ளதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. வாயு தொல்லை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க இது உதவுகிறது.

Image Source: istock

உடல் எடை மேலாண்மை!

புளிச்சாறில் குறைந்த அளவு கலோரி மற்றும் கொழுப்பு நிறைந்துள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து நிரம்பியுள்ளதால் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் எடையை நிர்வகிக்க உதவுகிறது.

Image Source: pexels-com

சர்க்கரை அளவு மேலாண்மை!

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒழுங்குபடுத்தி இன்சுலின் உணர்த்திறனை மேம்படுத்த இந்த புளிச்சாறு உதவுகிறது. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் புளிச்சாறை மருத்துவர் ஆலோசனையோடு உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

Image Source: istock

கவனத்தில் கொள்ள வேண்டியவை

கோடைகாலத்தில் நமது உடல் சீரான வெப்பநிலையை பராமரிக்க இது போன்ற பானங்களை அருந்துவதுசிறந்தது. இருப்பினும், உங்கள் உடலுக்கு குறிப்பிட்ட இந்த பானங்கள் ஏற்றதா? இல்லையா? என மருத்துவரிடம் ஆலோசித்து பின் பருகுவது நல்லது!

Image Source: istock

Thanks For Reading!

Next: ‘கோடை வெயில், உடல் எடை’ - இரண்டையும் சமாளிக்க உதவும் உணவுகள்!

[ad_2]