[ad_1] கோடை காலத்தில் ஏற்படும் அரிப்பை போக்கும் வீட்டு வைத்தியங்கள்

May 10, 2024

கோடை காலத்தில் ஏற்படும் அரிப்பை போக்கும் வீட்டு வைத்தியங்கள்

Anoj

கோடை கால அரிப்பு

கோடை காலத்தில் சரும அரிப்பு ஏற்படுவது பலரும் சந்திக்கும் முக்கிய பிரச்சனையாகும். இது பல நேரங்களில் கடும் அசெளகரியத்தை உண்டாக்கக்கூடும். அப்படிபட்ட அரிப்பில் இருந்து நிவாரண பெற உதவும் வீட்டு வைத்தியங்கள் பற்றி இங்கு காணலாம்

Image Source: pexels-com

அரிப்பு காரணங்கள்

புற ஊதா கதிர்வீச்சின் தொடர்ச்சியான வெளிப்பாடு, தோலை சேதப்படுத்தி அரிப்பு மற்றும் வீக்கத்தை தூண்டக்கூடும். அதேபோல், வியர்வை படிவதால் உண்டாகும் ஹீட் ரேஷ் கூட சருமத்தில் சிவத்தல், வீக்கம் மற்றும் அரிப்பை உண்டாக்கலாம்.

Image Source: istock

ஐஸ் ஒத்தடம்

அரிப்பு உள்ள பகுதிகளில் ஈரமான துணி அல்லது ஐஸ் பேக்கை பயன்படுத்துங்கள். அவை சருமத்தை மரத்துப்போகச் செய்து, அரிப்புகளைப் போக்க உதவுகிறது. இது கோடையில் ஏற்படும் அரிப்புகளிலிருந்து உடனடி நிவாரணமும் அளிக்கிறது

Image Source: istock

ஓட்மீல் பாத்

குளியலுக்கு பயன்படுத்தும் வெதுவெதுப்பான நீரில் ஓட்மீல் சேர்த்து 15 முதல் 20 நிமிடங்கள் ஊறவைப்பது அரிப்பு மற்றும் எரிச்சலை நீக்கக்கூடும். ஓட்மீலில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், சருமத்தின் இயற்கை பாதுகாப்பை மீட்டெடுத்து சன்பர்னை தடுக்க உதவுகிறது

Image Source: istock

கற்றாழை ஜெல்

அரிப்பு ஏற்பட்ட பகுதியில் கற்றாழை ஜெல் தடவுவது, அரிப்பை போக்குவதோடு குணப்படுத்தும் பிராசஸை துரிதப்படுத்தும். கற்றாழை குளிர்ச்சியூட்டும் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது சூரிய ஒளி மற்றும் பிற கோடைகால அரிப்புகளை தணிக்கிறது

Image Source: istock

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து பேஸ்ட்டை உருவாக்கி, அரிப்பு உள்ள பகுதிகளில் தடவினால் உடனடி நிவாரணம் கிடைக்கும். இது வெயில், ஹீட் ரேஷ் அல்லது ஒவ்வாமை எதிர்விளைவுகளால் ஏற்படும் கோடைகால அரிப்புகளுக்கு பயனுள்ள தீர்வாகும்

Image Source: istock

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகரை தண்ணீரில் கலந்து, காட்டன் பால் அல்லது சாப்ட் துணியைப் பயன்படுத்தி அரிப்பு எடுக்கும் பகுதியில் தடவ வேண்டும். இது சூரிய ஒளி, பூச்சி கடித்தல் மற்றும் வெப்ப சொறி உள்ளிட்ட தோல் நிலைகளுக்கு இயற்கை தீர்வாக அமைகிறது

Image Source: istock

புதினா எண்ணெய்

தேங்காய் எண்ணெய் போன்ற கேரியர் எண்ணெயுடன் புதினா எண்ணெயை சேர்த்து, அரிப்பு உள்ள பகுதிகளில் தடவ வேண்டும். இது அப்பகுதியில் உணர்ச்சியின்மை உண்டாக்கி அரிப்பை போக்க செய்கிறது. அதன் ஆண்டி மைக்ரோபியல் பண்புகள் தொற்றுநோய்களை தடுக்க உதவும்

Image Source: istock

தேங்காய் எண்ணெய் மசாஜ்

அரிப்பு எடுக்கும் பகுதியில் தேங்காய் எண்ணெயை தடவி மசாஜ் செய்வது ஈரப்பதத்தை பராமரிப்பதோடு எரிச்சலை தணிக்க உதவும். தேங்காய் எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை கோடை கால சரும அசெளகரியங்களில் இருந்து நிவாரணம் தரக்கூடும்

Image Source: istock

Thanks For Reading!

Next: சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் சந்திக்கும் பொதுவான சவால்கள்!

[ad_2]