May 26, 2024
கோடை காலத்தில் அதிக வியர்வை காரணமாக உடலில் அழுக்குகள் மற்றும் கிருமிகள் படிகின்றன. உடல் சுகாதாரத்தை பேணிக்காப்பதால் பல நோய் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும். மேலும் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
Image Source: istock
கோடை காலத்தில் அதிகமாக வியர்வை சுரக்கும் பகுதிகளில் ஒன்று அக்குள். இங்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. எனவே அக்குள் பகுதிகளை நன்றாக சுத்தம் செய்யும் போது இதுபோன்ற பாக்டீரியாக்கள் தங்காமல் தடுக்க முடியும்.
Image Source: istock
காதுகளில் அழுக்கு சேர்வது இயல்பு. காதுகளை அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். மிருதுவான துணியை கொண்டு சுத்தம் செய்யவும். அதிக அழுக்குகள் படித்திருந்தால் மருத்துவ உதவியை நாடவும்.
Image Source: istock
இடுப்பு பகுதி மற்றும் அந்தரங்க உறுப்புகளை வெதுவெதுப்பான நீரில் சோப்பு வைத்து சுத்தமாக கழுவ வேண்டும். தினசரி உள்ளாடைகளை மாற்ற வேண்டும். தீவிர நோய் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க இது உதவும்.
Image Source: istock
நகங்களை சுத்தம் செய்யாமல் இருக்கும்போது அதில் அழுக்குகள் தங்கி பல பாக்டீரியாக்களை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம். நோய் தொற்றுக்கு முக்கிய காரணம் நகங்களில் உள்ள அழுக்குகள். எனவே நகங்களை வெட்டி சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.
Image Source: istock
நம்மில் பலரும் பாதங்களைக் குறித்து பெரிதாக கவலைப்படுவதில்லை. பாதங்களை சோப்பு மற்றும் தண்ணீரில் சுத்தம் செய்யலாம். இது பாதங்களில் வெடிப்பு, வறட்சி ஏற்படாமல் தடுக்க உதவும்.
Image Source: pexels-com
நமது உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும்போது பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படாமல் நம்மால் பாதுகாக்க முடியும். இதனால் நமது உடலில் பாக்டீரியா தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
Image Source: istock
உடலில் சரும பிரச்சனை முதல் வயிற்றுப் பிரச்சனைகள் வரை பாக்டீரியா தொற்றுக்களால் பல பாதிப்புகள் ஏற்படும். அடிக்கடி உங்கள் கைகளை சோப்பு உபயோகித்து சுத்தமாக கழுவ வேண்டும்.
Image Source: istock
முகப்பரு ஹார்மோன் பாதிப்புகளால் ஏற்படுகிறது என்றாலும் சுத்தமாக முகத்தை கழுவாததாலும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். முகத்தில் உள்ள துளைகளில் அழுக்கு மற்றும் வியர்வைகள் தங்கி சரும பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
Image Source: istock
Thanks For Reading!