May 23, 2024
இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன்பு உங்கள் மேக்கப்பை அகற்றுவது மிகவும் அவசியம். ஏனெனில் மேக்கப்பை அப்படியே வைத்து இருப்பது சருமம் சுவாசிக்க முடியாமல் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
Image Source: pexels-com
உங்கள் சருமத்திற்கு ஏற்ற க்ளீன்சரை எடுத்து முகத்தை நன்றாக கழுவுங்கள். வெள்ளரிக்காய் மற்றும் தர்ப்பூசணி கொண்ட ஹைட்ரேட்டிங் க்ளீன்சரை பயன்படுத்துங்கள். இது சருமத்தை ஹைட்ரேட்டிங் செய்கிறது.
Image Source: istock
கோடை கால வெப்பம் உங்கள் சருமத்தை சேதப்படுத்த வாய்ப்பு உள்ளது. கோடை காலத்தில் சருமத்திற்கு ஊட்டச்சத்து அளிக்கும் டோனரை பயன்படுத்துங்கள்.
Image Source: istock
உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால் சீரத்தை பயன்படுத்தி வரலாம். ஹைட்ரேட்டிங் சீரத்தை தேர்ந்தெடுக்கலாம். உங்களுக்கு எண்ணெய் சருமம் என்றால் லேசான சீரமை தேர்ந்தெடுங்கள்.
Image Source: istock
கோடையில் அதிகப்படியான வெப்பத்தால் கண்களுக்கு கீழே கருவளையங்கள் உண்டாக வாய்ப்புள்ளது. எனவே கண்களுக்கு கீழே உள்ள கருவளையங்களை போக்க கண் க்ரீமை பயன்படுத்துங்கள்.
Image Source: pexels-com
உங்கள் சருமத்தை ஈரப்பதத்தை தக்க வைக்க மாய்ஸ்சரைசரை பயன்படுத்துங்கள். அதே மாதிரி இரவில் 8-9 மணி நேரம் தூக்கம் அவசியம்.
Image Source: istock
பாடி மசாஜ் எண்ணெயை பயன்படுத்தி இரவில் பாடி மசாஜ் செய்து வரலாம். இது உங்கள் தசைகளை தளர்த்தி, சருமத்திற்கு ஊட்டமளித்து சரும பளபளப்பை தருகிறது.
Image Source: istock
கோடை காலத்தில் இரவில் தூங்குவதற்கு முன்பு குளித்து விட்டு தூங்கலாம். இரவு நேரத்தில் குளிக்கும் போது ஸ்க்ரப் பயன்படுத்தி சருமத்தை சுத்தம் செய்யுங்கள். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவுகிறது.
Image Source: istock
இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு இயற்கையான ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்தி வரலாம். இது சரும அழகை மேம்படுத்த உதவுகிறது. ஃபேஸ் மாஸ்க்கை அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து கழுவுங்கள்.
Image Source: istock
Thanks For Reading!