[ad_1] கோடை காலத்தில்  'Cold Coffee' குடிப்பதன் நன்மைகள் தெரியுமா?

Jun 4, 2024

கோடை காலத்தில் 'Cold Coffee' குடிப்பதன் நன்மைகள் தெரியுமா?

Anoj

கோல்டு காபி நன்மைகள்

கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலை எதிர்த்து போராட சிறந்த பானமாக 'கோல்டு காபி' திகழ்கிறது. அதில் மனநிலை மேம்படுத்துதல் முதல் உடல் எடை குறைப்பு வரை எண்ணற்ற நன்மைகள் உள்ளது. அதை பற்றி இங்கு விரிவாக காணலாம்

Image Source: unsplash-com

ஆற்றல் அதிகரிப்பு

கோல்டு காபியில் காஃபின் உள்ளடக்கம் உள்ளது. இது விழிப்புணர்வு அளவை அதிகரிக்கவும், உடலின் ஆற்றல் அளவை மேம்படுத்தவும் பயன்படுகிறது

Image Source: istock

ஆன்டி ஆக்ஸிடன்ட்

கோல்டு காபியில் ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. இது வீக்கத்தை குறைக்கவும், உடலை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது

Image Source: pexels-com

உடல் செயல்பாடுகள் அதிகரிக்கும்

உடற்பயிற்சிக்கு முன்பு கோல்டு காபி குடிக்கும் பட்சத்தில், ஸ்டாமினா அளவு அதிகரித்து உடல் செயல்பாடுகள் மேம்படக்கூடும். இதற்கு கோல்டு காபியில் காணப்படும் காஃபின் முக்கிய காரணமாகும்

Image Source: istock

எடை மேலாண்மை

கோல்டு காபி பசியை கட்டுப்படுத்தவும், மெட்டபாலிசம் அதிகரிக்கவும் உதவி புரிகிறது. அதனை தொடர்ச்சியாக குடித்துவரும் பட்சத்தில் உடல் எடையை எளிதாக பராமரித்திட முடியும்

Image Source: istock

இதய நோய் அபாயம்

கோல்டு காபியில் காணப்படும் சில கலவைகள், இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், ரத்த அழுத்தம் அளவை கட்டுப்படுத்தவும் பயன்பட செய்கிறது

Image Source: istock

வயிற்றுக்கு நல்லது

செரிமான பிரச்சனை இருப்பவர்கள் கோல்டு காபி குடிப்பது சிறந்த பலனை தரக்கூடும். அதில் அமிலத்தன்மை குறைவாக இருப்பதால், வயிற்று அசெளகரியங்கள் ஏற்படுவது குறையக்கூடும்

Image Source: istock

மனநிலை மேம்படும்

காபின் நுகர்வுக்கும், மனநிலை மாற்றத்திற்கும் நேரடி தொடர்பு உள்ளது. தினமும் கோல்டு காபி குடித்து வரும் பட்சத்தில், கவலைகளை மறக்கடிக்க செய்து மன ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடும்

Image Source: pexels-com

உடலை குளிர்ச்சியாக்கும்

உடல் உஷ்ணத்தை குறைக்க கோல்டு காபி சிறந்த தீர்வாக கருதப்படுகிறது. அதனை ஜில்லாக குடிப்பது உடல் சூட்டை போக்கவும், புத்துணர்ச்சி அதிகரிக்கவும் பயன்படுகிறது

Image Source: istock

Thanks For Reading!

Next: சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காய் சாப்பிடலாமா?

[ad_2]