[ad_1] கோடை வெப்பத்தை தணிக்க சென்னை அருகே இந்த அருவிக்கு ட்ரிப் போங்க!

May 15, 2024

கோடை வெப்பத்தை தணிக்க சென்னை அருகே இந்த அருவிக்கு ட்ரிப் போங்க!

Anoj

நீர்வீழ்ச்சி ட்ரிப்

சென்னை மக்களே! கோடை வெப்பத்தில் இருந்து பிரேக் எடுக்க விரும்பினால், உங்க ஏரியா அருகே இருக்கும் இந்த அழகிய நீர்வீழ்ச்சிக்கு குடும்பத்தினருடன் சென்றுவாருங்கள். கோடையிலும் தண்ணீர் வரத்து நிச்சயம் சிறிதளவு இருக்கும் அருவிகளை இங்கு காணலாம்

Image Source: pexels-com

நாகலாபுரம் அருவி

சென்னையில் இருந்து சுமார் 90 கி.மீ தொலைவில், ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இந்த அருவி அமைந்துள்ளது. சிறிது தூரம் ட்ரெக்கிங் பாதையில் பயணித்தால் இந்த அழகிய அருவியில் என்ஜாய் செய்ய முடியும்

Image Source: instagram-com/saiguru_j

தடா நீர்வீழ்ச்சி

இந்த அருவி, சென்னையில் இருந்து 92 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கம்பகம் மலைகள் இந்த இடத்தை சூழ்ந்துள்ளதால், சாகச ஆர்வலர்களுக்கு விருப்பமான இடமாக திகழ்கிறது. சுமார் 7 கி.மீ கரடுமுரடான பாதையில் பயணித்தால் இந்த நீர்வீழ்ச்சியை அடைய முடியும்

Image Source: instagram-com/mr_2k_kidd_

கைலாசகோணா அருவி

இந்த அருவி, சாகச மற்றும் இயற்கை ஆர்வலர்களின் ஃபேவரைட் ஸ்பாட்டாகும். இதன் சுத்தமான நீர் நோய்களை குணப்படுத்தும் மருத்துவ பண்புகளை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இந்த அருவி சென்னையில் இருந்து சுமார் 90 கி.மீ தொலைவில் சித்தூரில் உள்ளது

Image Source: instagram-com/__itzkarthikhere__

தலகோனா நீர்வீழ்ச்சி

இந்த அருவி, சென்னை வாசிகளின் முதல் விருப்பமாகும். சுமார் 270 அடி உயரத்தில் இருந்து நீரில் குளிப்பதோடு பல அரிய வகை வனவிலங்குகளை காணக்கூடிய வாய்ப்பும் கிடைக்கும். தலகோனா நீர்வீழ்ச்சி, சென்னையில் இருந்து 190 கி.மீ தொலைவில் உள்ளது

Image Source: instagram-com/shahvaliclicks

சதாசிவகோணா அருவி

சதாசிவகோணா நீர்வீழ்ச்சி குடும்பத்தினருடன் செல்ல மிகச் சிறந்த இடமாகும். இப்பகுதி புனித ஸ்தலமாகவும் கருதப்படுவதால், பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள வருகை புரிவார்கள். இந்த அருவி, சென்னையில் இருந்து 140 கி.மீ., தொலைவில் உள்ளது

Image Source: instagram-com/tirupati_the_spiritual_capital

கைகால் நீர்வீழ்ச்சி

கைகால் நீர்வீழ்ச்சி, ஆந்திரா மாநிலம் சித்தூரில் அமைந்துள்ளது. இந்த அருவி மூன்று அடுக்குகளாக பிரிக்கப்பட்டு சுமார் 40 அடி உயரத்தில் இருந்து விழுகிறது. நீர்வீழ்ச்சிகளுக்கு கீழே உள்ள தண்ணீர் நிரம்பிய குளங்களில் ஆட்டம் போட்டு மகிழலாம்

Image Source: instagram-com/_bagsandmaps_

வேலூர் அமிர்தி அருவி

அமிர்தி காடு மற்றும் ஜவத்து மலைகள் இந்த இடத்தைச் சூழ்ந்துள்ளதால், இயற்கை ஆர்வலர்களின் ஃபேவரைட் ஸ்பாட்டாகும். சுமார் 1.5 கி.மீ ட்ரெக்கிங் பயணத்தில் இந்த நீர்வீழ்ச்சியை அடையலாம். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இங்கு குளிக்க செய்யலாம்

Image Source: instagram-com/sujai_vlogs

சக்ர தீர்த்தம் நீர்வீழ்ச்சி

இது திருப்பதியில் உள்ள பிரபலமான நீர்வீழ்ச்சியாகும். மத ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த அருவியின் நீரில் குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக கூறப்படுகிறது. சுமார் 100 அடி உயரத்தில் இருந்து இந்த அருவியின் தண்ணீர் கீழே பாயக்கூடும்

Image Source: instagram-com/maa_ooru_tirupati

Thanks For Reading!

Next: தென் கொரியா 'சியோல்' நகரில் பார்க்க வேண்டிய அழகான இடங்கள்

[ad_2]