May 10, 2024
கோடையின் உஷ்ணத்தை கட்டுப்படுத்துவதோடு, ஆரோக்கியமான உடல் எடையையும் மேலாண்மை செய்ய உதவும் உணவுகள் சிலவற்றை பற்றி இங்கு நாம் காணலாம்.
Image Source: istock
நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்த இந்த வெள்ளரிக்காயின் நுகர்வு ஆனது கோடை வெயிலில் உங்களை நீரேற்றமாக வைத்துக்கொள்வதோடு, ஆரோக்கிய உடல் எடையை பராமரிக்கவும் உதவுகிறது.
Image Source: istock
90% நீர் உள்ளடக்கம் கொண்டிருக்கும் இந்த தர்பூசணி பழத்தின் நுகர்வு ஆனது கோடையில் உண்டாகும் நீரிழப்பை ஈடு செய்வதோடு, ஆரோக்கிய உடல் எடை பராமரிப்பிலும் உதவுகிறது.
Image Source: pexels-com
அதிகளவு நீர் மற்றும் குறைந்தளவு கலோரிகள் கொண்ட இந்த செலரியின் நுகர்வு ஆனது, கோடையில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க உதவுவதோடு, உடல் பருமன் உண்டாவதன் வாய்ப்பையும் குறைக்கிறது.
Image Source: istock
கலோரி உள்ளடக்கம் குறைவாக காணப்படும் பெர்ரி பழங்களான ப்ளாக் பெர்ரி, ராஸ்பெர்ரி, ப்ளூ பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றின் நுகர்வு ஆனது, கோடையை சமாளிக்க உதவுவதோடு, உடல் எடை பராமரிப்பதிலும் உதவுகிறது.
Image Source: istock
நீர் உள்ளடக்கம் அதிகம் கொண்ட தக்காளி பழத்தின் நுகர்வு கோடை வெயிலை சமாளிக்க உதவுகிறது. அதேநேரம் இதில் காணப்படும் குறைவான கலோரிகள் ஆரோக்கிய உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.
Image Source: istock
வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பழத்தின் நுகர்வு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கோடையில் உண்டாகும் கிருமி தொற்றுகளை தடுக்கிறது. அதேநேரம், சீரான செரிமானத்தை உறுதி செய்து எடையை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.
Image Source: istock
சாலட் தயாரிப்பின் போது அதிகம் பயன்படுத்தப்படும் இந்த இலைக்கோசு (Lettuce) வைட்டமின் ஏ, கே போன்றவற்றின் சிறந்த ஆதாரமாக உள்ளது. மேலும், உடல் பருமன் எதிர்ப்பு உள்ளிட்ட பல ஆரோக்கிய பிரச்சனைகளை சமாளிக்கவும் உதவுகிறது.
Image Source: istock
உடலில் நீர் சத்தை உறுதி செய்யும் ஒரு ஊட்டம் மிக்க காயாக இந்த குடை மிளகாய் பார்க்கப்படுகிறது. மேலும், இதில் காணப்படும் குறைந்தளவு கலோரி உள்ளடக்கம், ஆரோக்கிய உடல் எடையை பராமரிப்பதில் உதவி செய்கிறது.
Image Source: istock
Thanks For Reading!