Jul 4, 2024
BY: Anojகோயில்களில் வழங்கப்படும் பிரசாத வகைகளில் ஒன்றான கதம்ப சாதத்தை, சுவை மாறாமல் வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை இங்கு பார்க்கலாம்
Image Source: instagram-com/joysofindiancooking
பச்சரிசி - 1 கப்; துவரம் பருப்பு - அரை கப்; உப்பு - சுவைக்கேற்ப; மஞ்சள் - 1 டீஸ்பூன்; புளிக்கரைசல் - அரை கப்; பூசணி - கால் கப்; கத்திரிக்காய் - கால் கப்; வாழைக்காய் - கால் கப்; வேகவைத்த கருப்பு கொண்டைக்கடலை, வேர்க்கடலை - கால் கப்
Image Source: istock
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்; தனியா - 2 டீஸ்பூன்; வரமிளகாய் - 6; தேங்காய் துருவல் - அரை கப்; நல்லெண்ணெய் - தேவையான அளவு; கடுகு - 1 டீஸ்பூன்; கறிவேப்பிலை - சிறிதளவு; பெருங்காயம் - அரை டீஸ்பூன்; எண்ணெய் - தேவையான அளவு; துருவிய வெல்லம் - 1 டீஸ்பூன்
Image Source: istock
முதலில் பச்சரிசி, துவரம் பருப்பு இரண்டையும் தண்ணீர் விட்டு வேகவைத்து தனியாக வைத்துகொள்ளவும். அதேபோல், அனைத்து காய்கறிகளையும் நறுக்கிக்கொள்ள வேண்டும்
Image Source: istock
அடுத்து, கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடலை பருப்பு, தனியா, வர மிளகாய் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வதக்கி மிக்ஸிக்கு மாற்றி பொடியாக அரைத்துகொள்ளவும்
Image Source: istock
ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசலை ஊற்றி, அத்துடன் 1 கப் நீர் சேர்த்து, உப்பு, மஞ்சள் மற்றும் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வேகவிட வேண்டும்
Image Source: istock
காய்கறிகள் ஓரளவு வெந்ததும் வேகவைத்த கருப்பு கொண்டைக்கடலை மற்றும் வேர்க்கடலையை சேர்க்க வேண்டும். அடுத்து, ஏற்கனவே பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து கொதிக்கவிட வேண்டும்
Image Source: istock
பிறகு, துருவிய வெல்லத்தை சேர்த்துவிட்டு வேகவைத்த அரிசி மற்றும் பருப்பினை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்
Image Source: pexels-com
இறுதியாக, கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தை தாளித்துவிட்டு, அரிசி கலவையில் சேர்த்தால் சூப்பரான கதம்ப சாதம் ரெடி.
Image Source: instagram-com/padmabalasubramanian
Thanks For Reading!