[ad_1] கோழிக்கோடு ‘சிக்கன் தம் பிரியாணி’ செய்முறை!

May 9, 2024

BY: mukesh M

கோழிக்கோடு ‘சிக்கன் தம் பிரியாணி’ செய்முறை!

கோழிக்கோடு சிக்கன் தம் பிரியாணி!

கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் பரவலாக கிடைக்கும் சிக்கன் தம் பிரியாணியை நம் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்.

Image Source: istock

தேவையான பொருட்கள்!

சிக்கன் - 500கி | வெங்காயம் - 3 | தக்காளி - 3 | பச்சை மிளகாய் - 5 | கொத்தமல்லி - 1 கொத்து | எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்

Image Source: istock

தேவையான பொருட்கள்!

பிரியாணி மசாலா - 1 ஸ்பூன் | பட்டை - சிறு துண்டு | பே இலை - 1 | கிராம்பு - 3 | அன்னாசி பூ - 2 | அரிசி - 3 கப் | உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

Image Source: istock

செய்முறை படி - 1

முதலில் எடுத்துக்கொண்ட சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தம் செய்து; சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தொடர்ந்து அரிசியை அலசி சுத்தம் செய்து - மூழ்கும் அளவு தண்ணீருட ன் சேர்த்து 20 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.

Image Source: istock

செய்முறை படி - 2

பின்னர் எடுத்துக்கொண்ட வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்கு பொடியாக நறுக்கி தனித்தனியே தயாராக எடுத்து வைக்கவும்.

Image Source: pexels-com

செய்முறை படி - 3

தற்போது பிரியாணி மசாலா தயார் செய்வதன் முதல் படியாக கடாய் ஒன்றில் சிறிதளவு எண்ணெயுடன் வெங்காயம், சிக்கன் சேர்த்து 7 நிமிடங்கள் வரை வதக்கவும்.

Image Source: istock

செய்முறை படி - 4

தொடர்ந்து இதனுடன் பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லி சேர்த்து 5 - 6 நிமிடங்களுக்கு வதக்கவும். பின் இதனுடன் எலுமிச்சை சாறு, உப்பு, பிரியாணி மசாலா சேர்த்து சிக்கன் நன்கு வேக காத்திருந்து அடுப்பில் இருந்து இறக்கவும்.

Image Source: istock

செய்முறை படி - 5

தொடர்ந்து மற்றொரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெயுடன் பட்டை, லவங்கம், பே இலை, அன்னாசி பூ ஆகியவற்றை சேர்த்து தாளித்து பின் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

Image Source: istock

வெள்ளை சிக்கன் பிரியாணி ரெடி!

தண்ணீர் நன்கு கொதிக்க; அரிசி சேர்த்து வேக வைத்து இறக்கவும். பின் இந்த சாதத்தை முன்னரே தயார் செய்து வைத்த சிக்கன் மசாலாவுடன் சேர்த்து கலந்து சாதத்தின் உஷ்னத்தில் தம் கட்ட, பிரியாணி ரெடி!

Image Source: istock

Thanks For Reading!

Next: ஆரோக்கியமான 'வெந்தய கஞ்சி' செய்முறை.. உடலுக்கு ரொம்ப நல்லது!

[ad_2]