[ad_1] கோவா சென்றால் கட்டாயம் ருசிக்க வேண்டிய அந்த 8 பொருட்கள்!

Jun 1, 2024

கோவா சென்றால் கட்டாயம் ருசிக்க வேண்டிய அந்த 8 பொருட்கள்!

mukesh M

கோவாவின் தனி சுவை!

நாட்டின் தனித்துவமான சுவைகளை அங்கீகரிக்கும் வகையில் உணவு பொருட்களுக்கு அளிக்கப்படும் GI குறிச்சொல் பெற்ற கோவாவின் தனித்துவமான உணவு பொருட்கள் பற்றி இங்கு காணலாம்!

Image Source: unsplash-com

பெபின்கா!

முட்டையின் மஞ்சள் கரு பயன்படுத்தி தயார் செய்யப்படும் ஒரு உணவு பொருள். 7 - 16 அடுக்குகளை கொண்ட இந்த உணவு பொருள், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது பரிமாறப்படும் ஒரு பாரம்பரிய உணவு பொருள் ஆகும்.

Image Source: unsplash-com

கோலா மிளகாய்!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பலவகை மற்றும் பல சுவைகளில் கிடைக்கும் இந்த கோலா மிளகாய், கோவாவின் பிரபலமான ஒரு உணவு பொருள் ஆகும். கோவாவில் கிடைக்கும் இந்த மிளகாய் தனித்துவமான காரத்திற்கு பெயர் பெற்றது.

Image Source: unsplash-com

முந்திரி பருப்பு!

கோவாவில் அதிகம் பயிரடப்படும் ஒரு உணவு பொருளாக முந்திரி பருப்பு பார்க்கப்படுகிறது. கோவாவில் கிடைக்கும் இந்த முந்திரி பருப்புகளின் தோற்றம் மற்றும் சுவை; மற்ற மாநில பருப்புகளில் இருந்து பெரிதும் மாறுபடுகிறது.

Image Source: unsplash-com

முந்திரி பென்னி!

முந்திரி பென்னி எனப்படுவது முந்திரி பழத்தை பயன்படுத்தி தயார் செய்யப்படும் ஒரு வகை (மது) பானம் ஆகும். இதன் தனித்துவமான தயாரிப்பு முறை மற்றும் சுவைக்கு பெயர் பெற்ற இது கோவாவில் மட்டும் கிடைக்கும் ஒரு பானம் ஆகும்.

Image Source: unsplash-com

சாட் ஷிரோ பேனோ!

செவன் ரிட்ஜ்ட் ஓக்ரா (அ) கோவா பிண்டி என்றும் அழைக்கப்படும் ஒரு அரிய வகை வெண்டைக்காய். கோவாவின் தனித்துவமான இந்த வெண்டைக்காய் ஒரு அடி நீளம் வரை வளரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image Source: unsplash-com

மண்குராட் மாம்பழம்!

மன்கூர் (அ) கொரடா என்றும் அழைக்கப்படும் இந்த மாம்பழம் கோவாவின் தனித்துவ அடையாளம் ஆகும். இந்த மாம்பழத்தின் தனித்துவமான சுவைக்காக, இது மாநிலமெங்கும் அதிகம் பயிரிடப்படுகிறது.

Image Source: pexels-com

கோன் காஜே!

கோவா திருவிழாக்களில் பிரதான இடம் பிடிக்கும் இந்த இனிப்பு வகை ஆனது; கடலை மாவு, இஞ்சி, வெல்லம், எள் ஆகியவற்றின் கலவையில் தயார் செய்யப்படும் ஒரு அற்புத இனிப்பு வகை ஆகும்.

Image Source: unsplash-com

மைந்தோலி வாழைப்பழம்!

மொய்ரா வாழை என்றும் அழைக்கப்படும் இந்த மைந்தோலி வாழைப்பழம் ஆனது கோவாவின் தனித்துவமான பழப்பயிர்களில் ஒன்றாகும். ஒரு வாழைக்குலையில் 85 - 98 பழங்கள் வரை காணப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image Source: unsplash-com

Thanks For Reading!

Next: அட...உளுந்தம் பருப்பில் இத்தனை டிஷ் பண்ணலாமா?

[ad_2]