[ad_1] கோவிலுக்கு அருகில் வீடு கட்டுவது நல்லதா? வாஸ்து சாஸ்திரம் கூறுவது என்ன?

Aug 21, 2024

கோவிலுக்கு அருகில் வீடு கட்டுவது நல்லதா? வாஸ்து சாஸ்திரம் கூறுவது என்ன?

mukesh M

கோவிலுக்கு அருகில் வீடு?

கோவிலுக்கு அருகில் வீடு வாங்குவது (அ) கட்டுவது, நம் செல்வங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உண்டாக்கும் என்ன வாஸ்து சாஸ்திரம் கூறும் நிலையில், வாஸ்துப்படி வீட்டை கட்டுவது (அ) வாங்குவது எப்படி என இங்கு காணலாம்!

Image Source: x-com

வாஸ்து கூறுவது என்ன?

வாஸ்து சாஸ்திரத்தின் படி கோவிலுக்கு அருகில் வீடு வாங்குவது (அ) கட்டுவது, தவிர்க்க வேண்டிய ஒன்றாகும். தவிர்க்க முடியாத சூழலில் வீட்டை கட்ட வேண்டிய நிலை வந்தால், குறிப்பிட்ட ஒரு சில வாஸ்து குறிப்புகளை கடைப்பிடிப்பது அவசியம்!

Image Source: unsplash-com

25மீ தூரம்!

கோவிலுக்கு அருகில் வீட்டை வாங்க வேண்டிய சூழ்நிலை வந்தால், கோவிலின் பிரதான நுழைவாயிலுக்கும், வீட்டிற்கு இடையில் சுமார் 25மீ (அ) 80அடி தூரம் இருப்பதை உறுதி செய்யுங்கள்.

Image Source: unsplash-com

கோவிலை பார்க்க கூடாது!

வீட்டின் பிரதான நுழைவாயில், கோவிலை பார்த்தபடி அமைவது கூடாது. அதாவது, வீட்டின் பிரதான நுழைவாயில், கோவில் இருக்கும் திசையில் அமைவது கூடாது.

Image Source: unsplash-com

கோவிலின் நிழல்??

கோவிலின் நிழல் வீட்டின் மீது படாத வகையில் வீட்டை தள்ளி தொலைவாக கட்டுவது அவசியம். குறிப்பாக, கோவின் கோபுரத்தின் நிழல், உங்கள் வீட்டின் மீது படாத வகையில் வீட்டை தொலைவாக கட்டுவது அவசியம்!

Image Source: unsplash-com

தெற்கு (அ) மேற்கு திசையில் கோவில்?

கோவிலுக்கு அருகில் வீட்டை கட்ட விரும்பும் நபர்கள், வீட்டிற்கு தெற்கு (அ) மேற்கு திசையில் கோவில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். குறிப்பிட்ட இந்த திசை, வீட்டில் செல்வ வரவை அதிகரிக்கும்.

Image Source: unsplash-com

வடக்கு (அ) கிழக்கு திசையில் கோவில்?

அதேநேரம் வீட்டிற்கு வடக்கு (அ) கிழக்கு திசையில் கோயில் (தலைவாசல்) இருப்பது, வீட்டில் உள்ளவர்களின் நலத்திற்கு கேடாய் அமையும். எனவே, குறிப்பிட்ட இந்த திசையில் உங்கள் வீடு அமையாத வகையில் பார்த்துக்கொள்ளவும்.

Image Source: unsplash-com

கோவிலை விட உயரமாக வீடு?

வீட்டிற்கு அருகே அமைந்துள்ள கோவிலின் கோபுரம், வீட்டை விட உயரமாக இருப்பதை உறுதி செய்யுங்கள். கோபுரத்தை விட வீட்டை உயரமாக கட்டுவது, சூரியனின் சக்தி பரிமாற்றத்தை தடுக்கும்!

Image Source: unsplash-com

கோவில் பொருட்களை பயன்படுத்தாதீர்!

கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட கற்களை வீட்டை கட்டும் போது பயன்படுத்துவத நல்லது என பலரும் நம்புகின்றனர். வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் கூற்றுப்படி இது தவறான ஒரு செயல். கோவில் வளாகத்திற்குள் இருக்கும் எந்தொரு பொருளையும் நம் வீட்டை கட்ட பயன்படுத்த கூடாது!

Image Source: unsplash-com

Thanks For Reading!

Next: ‘காதல் தோல்வி-யின்’ வலியை குறைக்க இசை உதவுமா?

[ad_2]