May 25, 2024
யோகாவின் முக்கிய அம்சமாக முத்திரைகள் திகழ்கிறது. ஒவ்வொரு முத்திரைக்கும் தனித்துவமான ஆற்றல் உள்ளது. இந்தப் பதிவில், சக்தி முத்திரை எப்படி செய்வது பற்றியும், அதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் விரிவாக காணலாம்
Image Source: instagram-com/fitnessmantra_nidhi
சக்தி முத்திரைக்கு எண்டோகிரைன் அமைப்பை ஒழுங்குபடுத்தும் ஆற்றல் உள்ளது. இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஹார்மோன் அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது
Image Source: instagram-com/omoceanlovenhealing
இந்த முத்திரை கருவுறுதலை மேம்படுத்த செய்கிறது. குறிப்பாக, இனப்பெருக்க உறுப்புகளின் செயல்பாட்டை தூண்டி ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு வழிவகுக்கிறது
Image Source: istock
சக்தி முத்திரை படைப்பாற்றல் திறனை மேம்படுத்த செய்கிறது. வாழ்கையில் தெளிவும், மனதளவில் நிம்மதியாக உணரவும் சக்தி முத்திரை உதவி புரிகிறது
Image Source: instagram-com/tanjamickwitz
சக்தி முத்திரை பயிற்சி மேற்கொள்வது மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வை குறைக்க உதவுகிறது. இதுதவிர, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுவதாகவும் நம்பப்படுகிறது
Image Source: istock
இந்த முத்திரை பயிற்சி, உடலின் ஆற்றல் சக்தியாக செயல்படும் மூன்றாவது சக்ராவை தூண்டி செரிமானத்தை மேம்படுத்தவும், செரிமான அசெளகரியங்களை போக்கவும் உதவுகிறது
Image Source: istock
ஒவ்வொரு நபரின் மனதிற்குள் உள்ள ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்த சக்தி முத்திரை பயன்படுகிறது. உடலில் உள்ள சக்திகளை தூண்டி, பல சவால்களை சந்திக்கும் வலிமையை தருகிறது
Image Source: instagram-com/robin-wilner
முதலில் முதுகுத்தண்டு நேராக இருக்கும் வகையில் அவரவும். கட்டை விரலை மடக்கி, நடுவிரல் மற்றும் ஆள்காட்டி விரலால் கட்டை விரலை சுற்றி பிடிக்க வேண்டும். அடுத்து, மோதிரம் விரல் மற்றும் கட்டை விரலின் நுனிகளை தொடுமாறு வைக்கவும். இந்த நிலையில் 10 நிமிடங்கள் வரை அப்படியே இருக்கவும்
Image Source: pexels-com
மாதவிடாய் காலத்தில் சக்தி முத்திரையை தவிர்க்க சிலர் பரிந்துரைக்கின்றனர். அவை ரத்தப்போக்கை அதிகரிக்கலாம் என நம்பப்படுகிறது. இதுதவிர, உயர் ரத்த அழுத்தம், இதய பிரச்சனை அல்லது கடுமையான நோய் பாதிப்பு இருந்தாலும் சக்தி முத்திரை பயிற்சி முன்பு மருத்துவரிடம் ஆலோசிக்கவும்
Image Source: instagram-com/shiziks
Thanks For Reading!