Jul 29, 2024
ஆக்ஸ்ஃபர்டு பல்கலைக்கழக பதிப்பகத்தால் வெளியிடப்படும் 'ஆக்ஸ்ஃபர்டு ஆங்கில அகராதி' ஆங்கில மொழியின் முதன்மை சொற் தொகுப்பு ஆகும். அதில் இடம் பெற்றுள்ள சில இந்திய மொழி சொற்களை இங்கு பார்க்கலாம்
Image Source: pexels-com
ஆக்ஸ்ஃபர்டு அகராதியில் 'நமஸ்தே' என்பதற்கு உள்ளங்கைகளைச் சேர்த்து ஒருவருக்கு மரியாதையுடன் வாழ்த்து சொல்வது அல்லது விடைபெறுவதற்குப் பயன்படுத்தும் வார்த்தை என்று பொருள் கூறப்பட்டுள்ளது.
Image Source: pexels-com
'அப்பா'வை குறிக்கும் இந்த ஹிந்தி வார்த்தைக்கு இந்தியாவில் மகாத்மா காந்திக்கு வழங்கப்படும் மரியாதைக்குரிய தலைப்பு என்று பொருள் சொல்லப்பட்டுள்ளது.
Image Source: pexels-com
'சட்னி' என்பது பழம், மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களால் செய்யப்படும் ஒரு காரமான துணை உணவு என்று ஆக்ஸ்ஃபர்டு அகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Image Source: pexels-com
2022 இல் ஆக்ஸ்ஃபர்டு அகராதியில் சேர்க்கப்பட்ட இந்த சொல் தேயிலை விற்கும் நபரைக் குறிப்பதாக வரையறுக்கப்பட்டுள்ளது. 'சாய்' இந்திய மற்றும் ஆங்கில கலாச்சாரத்தில் 'டீ'-ஐ குறிக்கும் சொல்.
Image Source: istock
பைஜாமா என்கிற வார்த்தையில் 'பை' என்பது கால் என்றும், 'ஜாமா' என்பது துணி என்றும் பொருள் தரும் ஹிந்தி சொல் ஆகும். இடுப்பில் அணியும் தளர்வான ஆடையை இந்த வார்த்தை குறிக்கிறது.
Image Source: pexels-com
'தோஸ்த்' என்கிற ஹிந்தி வார்த்தை நெருங்கிய உறவை அல்லது நண்பரைக் குறிக்கும் சொல். இதே பொருளுடன் ஆக்ஸ்ஃபர்டு அகராதியில் 'தோஸ்தானா' என்கிற சொல் இடம்பெற்றுள்ளது.
Image Source: istock
கடவுளையோ அல்லது தலைவர்களையோ போற்றுவதற்காகப் பக்தர்களால் அல்லது தொண்டர்களால் பயன்படுத்தப்படும் இந்திய மொழி சொல்லான 'ஜெய்' ஆக்ஸ்ஃபர்டு அகராதியில் உள்ளது.
Image Source: istock
ஆக்ஸ்ஃபர்டு அகராதியில் உள்ள குண்டர் என்று பொருள் தரும் இந்த சொல் திருடர்கள் அல்லது ஏமாற்றுக்காரர்களை குறிக்கும் 'தாக்' என்கிற ஹிந்தி வார்த்தையில் இருந்து மருவியது ஆகும்.
Image Source: istock
Thanks For Reading!