May 1, 2024
By: Anojசதாவரி மூலிகையில் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. அவை பெண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த எவ்வாறு உதவுகிறது என்பதை இங்கு விரிவாக காணலாம்
Image Source: istock
சதாவரி என்பது அடாப்டோஜெனிக் மூலிகையாகும். இது ஹார்மோன் சமநிலையின்மையை ஒழுங்குப்படுத்த உதவுகிறது. குறிப்பாக, மாதவிடாய் அல்லது மெனோபாஸ் காலங்களில் உதவியாக இருக்கும்
Image Source: istock
சதாவரி மூலிகை அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. அதனை தொடர்ச்சியாக உட்கொள்வது, உடலில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்தி தேவையற்ற அசெளகரியங்களை குறைக்க உதவுகிறது
Image Source: istock
சதாவரியில் ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் மினரல்கள் நிறைந்திருக்கின்றன. இவை பெண்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி நோய் தாக்குதலை தடுக்க உதவுகிறது
Image Source: istock
கருவுறுதல் வாய்ப்பை அதிகரிக்க சதாவரி மூலிகை உதவுகிறது. இது பெண்களின் இனப்பெருக்க அமைப்பை வலிமைப்படுத்த உதவும் சக்தி வாய்ந்த மூலிகையாகும்
Image Source: pexels-com
சதாவரி, அடாப்டோஜெனிக் பண்புகளை கொண்டிருப்பதால், மன அழுத்தம் மற்றும் கவலையை போக்கிட உதவுகிறது.
Image Source: istock
இந்த மூலிகையில் நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது செரிமான மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது. இதன் மூலம், வயிற்று அசெளகரியங்களை தடுத்திட முடியும்
Image Source: istock
சதாவரி மூலிகை மனநிலையை மேம்படுத்த செய்வதால், தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. குறிப்பாக, எவ்வித அசெளகரியமும் இன்றி ஆழ்ந்த தூக்கத்தை பெற முடியும
Image Source: istock
ஆயுர்வேதத்தின் படி, பெண்களுக்கான சிறந்த மூலிகையாக சதாவரி திகழ்கிறது. அதை தினசரி உணவு முறையில் சேர்ப்பது பெண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது
Image Source: istock
Thanks For Reading!