[ad_1] சதுப்பு நில காடுகளின் சொர்க்க பூமி.. பிச்சாவரம் பற்றி தெரியுமா?

May 8, 2024

சதுப்பு நில காடுகளின் சொர்க்க பூமி.. பிச்சாவரம் பற்றி தெரியுமா?

Anoj

பிச்சாவரம் படகு சவாரி

சதுப்புநிலக் காடுகளால் சூழப்பட்டுள்ள பிச்சாவரம், தமிழ்நாட்டில் அழகிய இடங்களில் ஒன்றாகும். அங்கு படகு சவாரி செல்கையில் ஜில்லுன்னு காற்று முகத்தில் வீசுவது இனிமையான அனுபவத்தை தரும்.

Image Source: instagram-com/le_commentator

எங்கு இருக்கிறது?

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே அமைந்துள்ளது. இங்கு சொந்த வாகனங்கள் அல்லது பேருந்தில் எளிதாக சென்றுவிடலாம். ரயிலில் செல்கையில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து 30 நிமிடங்களில் செல்லலாம்

Image Source: instagram-com/travelers_clicks

படகு சவாரி

அடர்ந்த பிச்சாவரம் காட்டிற்குள் படகு சவாரியில் செல்கையில், ஒரு இதமான உணர்வை நம்மால் அனுபவிக்க முடியும். படகு சவாரியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஈடுபட செய்யலாம்

Image Source: instagram-com/meetovertheweekend

கட்டணம் என்ன?

ஒரு மணி நேரம் 4 பேர் துடுப்பு படகிற்கு ரூ.450ம், 6 பேர் வரிசை படகிற்கு ரூ.650ம் வசூலிக்கின்றனர். இதுதவிர, ஸ்பீடு படகில் 8 பேர் செல்ல ரூ.1850 வசூலிக்கப்படுகிறது. சதுப்பு நில காட்டிற்குள் துடுப்பு படகு மட்டுமே செல்லக்கூடும்

Image Source: instagram-com/adarshdeshmukh

வனப்பகுதி கட்டணம்

படகு சவாரி கட்டணம் மட்டுமின்றி வனப்பகுதிக்குள் செல்ல பிரத்யேக கட்டணமும் உள்ளது. சிறுவர்களுக்கு 5 ரூபாயும், பெரியவர்களுக்கு 10 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது

Image Source: instagram-com/gritharan

பறவைகள் காணலாம்

பிச்சாவரம் பறவைகளின் சொர்க்க பூமி என சொல்லலாம். அங்கு 200க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வாழ்கிறது. பெலிகன்கள், ஹெரான்கள், எக்ரெட்ஸ், கிங்பிஷர் போன்ற பறவைகளை மிக அருகில் காணக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்

Image Source: instagram-com/indiatourism_mumbai

நீர் செயல்பாடுகள்

கயாக்கிங், கேனோயிங் போன்ற நீர் செயல்பாடுகளில் ஈடுபடலாம். இதுதவிர, அங்கிருக்கும் உள்ளூர் மற்றும் பிற சுற்றுலா பயணிகளுடன் சேர்த்து மீன் பிடித்தல் செயலிலும் ஈடுபடலாம்

Image Source: instagram-com/to_live_is_to_travel

சிறந்த நேரம் எது?

பிச்சாவரம் செல்வதற்கு செப்டம்பர் முதல் பிப்ரவரி காலக்கட்டம் சிறந்தது. கோடை காலத்தில் செல்லும் பட்சத்தில் மேற்கூரை இருக்கும் ஸ்பீடு படகை தேர்ந்தெடுக்கவும். குறிப்பாக, மதிய நேரத்தில் செல்வதை கட்டாயம் தவிர்க்கவும்

Image Source: instagram-com/timesofindiatravel

பார்க்க வேண்டிய இடங்கள்

பிச்சாவரம் கடற்கரை, பூம்புகார், சிதம்பரம் கோயில், தரங்கம்பாடி போன்ற இடங்களை பார்வையிடவும் திட்டமிட செய்யலாம். இது சுற்றுலா பயணிகள் கட்டாயம் செல்ல வேண்டிய இடமாகும்

Image Source: instagram-com/meetovertheweekend

Thanks For Reading!

Next: பிரமிக்கவைக்கும் டாப் 8 தனித்துவமான சுற்றுலா இடங்கள்!

[ad_2]