May 3, 2024
BY: Anojவீட்டில் இருப்போருக்கு ஆரோக்கியமான மற்றும் ருசியான காலை உணவை அளிக்க விரும்பினால், இந்த அவல் ரவா உருண்டையை முயற்சிக்க செய்யலாம். அதன் எளிய செய்முறையை இங்கு பார்க்கலாம்
Image Source: instagram-com/bhartiya_foodmagic
அவல் - 1 கப்; ரவை - 1 கப்; நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்; சீரகம் - 1 டீஸ்பூன்; உப்பு - தேவைக்கேற்ப; கடுகு - அரை டீஸ்பூன்; நெய் - 1 டீஸ்பூன்
Image Source: istock
உளுந்தம் பருப்பு - அரை டீஸ்பூன்; கடலைப் பருப்பு - அரை டீஸ்பூன்; வர மிளகாய் - 2; கறிவேப்பிலை - தேவையான அளவு; இட்லி பொடி - தேவைக்கேற்ப
Image Source: istock
முதலில் அவலை தண்ணீரில் நன்றாக அலசி வடித்துகொள்ளவும். அதில் வறுக்காத ரவையை சேர்த்து, சுடுதண்ணீர் லேசாக ஊற்றி சில நிமிடங்கள் மூடி வைக்கவும்
Image Source: istock
பிறகு, நறுக்கிய இஞ்சி, சீரகம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து மாவு பதத்திற்க கொண்டு வரவும். பின், ரவா - அவல் மாவை சிறிய உருண்டைகளாக பிடித்துக்கொள்ளவும்
Image Source: instagram-com/umadelicaciestips
அடுத்து, இட்லி தட்டில் உருட்டி எடுத்த ரவா - அவல் உருண்டையை வைத்து, சில நிமிடங்கள் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்
Image Source: instagram-com/adesignenthusiast
இப்போது, அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் உளுந்த பருப்பு, கடலைப்பருப்பு, வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்
Image Source: pexels-com
பிறகு, வேகவைத்த ரவா உருண்டையை சேர்த்து நன்றாக வதக்கி, அதன் மீது இட்லி பொடியை தூவ வேண்டும்
Image Source: istock
இறுதியாக, லேசாக நெய் சேர்த்து மிக்ஸ் செய்தால் சுவையான அவல் ரவா உருண்டை ரெடி. இதை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்
Image Source: instagram-com/priyascurrynation
Thanks For Reading!