Jul 9, 2024
BY: Anojசுரைக்காயில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆனால், அதனை பலரும் உணவில் சேர்த்துகொள்வது கிடையாது. அவர்கள் மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடும் வகையில் சுரைக்காய் கொண்டு லட்டு எப்படி செய்வது என்பதை இங்கு பார்க்கலாம்
Image Source: istock
துருவிய சுரைக்காய் - 2 கப்; நெய் - 5 டீஸ்பூன்; உலர் பழங்கள் - 2 கப்; ஏலக்காய் - அரை டீஸ்பூன்; ஜாதிக்காய் தூள் - அரை டீஸ்பூன்; தேங்காய் துருவல் - அரை கப்; சர்க்கரை - 250 கிராம்
Image Source: istock
முதலில் கடாயில் நெய் ஊற்றி உருகியதும், துருவிய சுரைக்காயை சேர்த்து பொன்னிறமாகும் வரை கிளற வேண்டும்
Image Source: istock
அடுத்து, சர்க்கரையை சேர்த்து, அவை கரையும் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்
Image Source: istock
பிறகு, பொடித்த உலர் பழங்களை சேர்த்து லேசாக வறுத்துவிட்டு அடுப்பை அணைத்துவிடலாம்
Image Source: istock
கலவை ஆறியதும் தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் தூளை சேர்த்துக்கொள்ள வேண்டும்
Image Source: istock
இப்போது கைகளில் நெய் தடவி, கலவையை லட்டு சைஸில் பிடித்துக்கொள்ள வேண்டும்.
Image Source: instagram-com/ammakithaali
இதனை காற்றுபுகாத டப்பாவில் வைத்தால் 2 வாரங்கள் வரை நன்றாக இருக்கக்கூடும். இதனை குழந்தைகளுக்கு கொடுத்தாலும் விரும்பி சாப்பிடுவார்கள்
Image Source: instagram-com/tarladalal
இந்த சுரைக்காய் லட்டு செரிமானத்தை சீராக்குவதோடு, உடலில் நீரேற்றத்தை பராமரிக்க உதவக்கூடும். இதிலுள்ள ஏலக்காய் மற்றும் ஜாதிக்காய் பொடி, உடலில் வலியை குறைக்கக்கூடும்
Image Source: pexels-com
Thanks For Reading!