Jul 23, 2024
சூரிய ஒளியின் புற கதிர்களால் சேதமடைந்த சருமத்தை பளபளப்பாக மாற்ற உதவும் ஸ்க்ரப் ஒன்றினை மசூர் பருப்பு, கற்றாழை, தயிர், கடலை மாவு கலவையில் தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!
Image Source: istock
மசூர் பருப்பு - 2 ஸ்பூன் | கற்றாழை ஜெல் - 1 ஸ்பூன் | மஞ்சள் - 1 ஸ்பூன் | கடலை மாவு - 1 ஸ்பூன் | தயிர் - 1 ஸ்பூன்
Image Source: istock
முதலில் எடுத்துக்கொண்ட மசூர் பருப்பை மிக்ஸி ஜார் ஒன்றில் சேர்க்கவும். பின் இதனுடன் மஞ்சள், கடலை மாவு சேர்த்து பொடியாக அரைத்து தனி ஒரு கோப்பைக்கு மாற்றவும்.
Image Source: istock
இதனிடையே எடுத்துக்கொண்ட கற்றாழை ஜெல்லினை தண்டில் இருந்து பிரித்து கோப்பை ஒன்றில் தயிருடன் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைக்கவும்.
Image Source: istock
பின் இதனுடன் மிக்ஸியில் அரைத்து எடுத்த பொடியை சேர்த்து நன்கு ஒரு முறை குழைத்துக்கொள்ள சன் டேனிங் பிரச்சனைக்கு தீர்வு தரும் ஸ்க்ரப் ரெடி!
Image Source: istock
தயாராக உள்ள இந்த ஸ்க்ரபினை பாதிப்படைந்த சருமத்தின் மீது அப்ளை செய்து நன்கு ஸ்க்ரப் செய்யவும். பின் வெதுவெதுப்பான நீர் பயன்படுத்தி சுத்தம் செய்துவிடவும்!
Image Source: pexels-com
ஆன்டி பாக்டீரியல் பண்பு கொண்ட மஞ்சள், மசூர் பருப்பு கலவையில் தயார் ஆகும் இந்த பேக் ஆனது பருக்கள், மருக்கள் பிரச்சனையில் இருந்து தீர்வு அளிக்கிறது!
Image Source: istock
மசூர் பருப்பு, மஞ்சள், தயிர் கலவையில் உண்டாகும் இந்த பேக் சருமம் தளர்வடைவதை தடுக்கிறது. அந்த வகையில் சுருக்கங்கள் அற்ற இளமை தோற்றம் பெற உதவியாக உள்ளது.
Image Source: istock
சரும துளைகளை ஆழ்ந்து சுத்தம் செய்வதோடு, சருமத்தின் மேல் அடுக்கில் மறைந்திருக்கும் இறந்த செல்களை அகற்றி பொலிவான, பளபளப்பான சருமம் பெற இது உதவுகிறது!
Image Source: istock
Thanks For Reading!