[ad_1] சன்-டேன் பிரச்சனையை போக்கி பளபளப்பான சருமம் பெற இதை செய்யுங்கள்!

Aug 8, 2024

சன்-டேன் பிரச்சனையை போக்கி பளபளப்பான சருமம் பெற இதை செய்யுங்கள்!

mukesh M

சன்-டேன் போக்கும் பேக்!

சூரிய ஒளியின் புற ஊதா கதிர் வீச்சானது சரும திசுக்களை சிதைத்து சன் - டேன் பிரச்சனைக்கு வழிவகுக்கிறது. இந்நிலையில், இந்த சன்-டேன் பிரச்சனையை போக்கி, பொலிவான சருமம் பெற உதவும் பேக் ஒன்றினை தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!

Image Source: istock

தேவையான பொருட்கள்!

காப்பி பொடி - 2 ஸ்பூன் | அரிசி மாவு - 2 ஸ்பூன் | செம்மரப் பொடி - 1 ஸ்பூன் | தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன் | பால் - தேவையான அளவு

Image Source: istock

செய்முறை படி - 1

முதலில் எடுத்துக்கொண்ட காப்பி பொடி, அரிசி மாவு மற்றும் செம்மரப் பொடியை சேர்த்து நன்கு ஒரு முறை கலந்துக்கொள்ளவும்.

Image Source: istock

செய்முறை படி - 2

பின் இதனுடன் தேங்காய் சேர்த்து நன்கு ஒரு முறை கலந்துவிடவும்.

Image Source: istock

செய்முறை படி - 3

பின் இறுதியாக இதனுடன் பால் போதுமான அளவு சேர்த்து அரை திட நிலைக்கு கரைத்துக்கொள்ள பேக் ரெடி!

Image Source: istock

எப்படி பயன்படுத்துவது?

தயாராக உள்ள இந்த பேக்னை சருமத்திற்கு அப்பை செய்து நன்கு உலர காத்திருக்கவும். பின், சிறிதளவு தேங்காய் எண்ணெய் உதவியுடன் ஸ்க்ரப் செய்து, பேக்கினை அகற்றவும்.

Image Source: pexels-com

பயன்பாட்டிற்கு பின்!

சருமத்திற்கு இந்த பேக் பயன்படுத்திய பின்னர், குளிர்ந்த நீர் கொண்டு சுத்தம் செய்யவும். தொடர்ந்து உங்கள் சருமத்திற்கு ஏற்ற மாய்சரைசர் கிரீம் அப்ளை செய்து மசாஜ் செய்து விடவும்!

Image Source: istock

சரும வறட்சி நீங்கும்!

சருமத்தில் சீரான இரத்த ஓட்டத்தை உறுதி செய்வதோடு, சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்கும் இந்த பேக் ஆனது, சரும வறட்சி பிரச்சனையில் இருந்து தீர்வு காண உதவுகிறது.

Image Source: istock

சரும பொலிவுக்கு உதவும்!

சரும துளைகளை ஆழ்ந்து சுத்தம் செய்யும் தன்மை கொண்ட இந்த பேக் ஆனது, சரும துளைகளில் மறைந்திருக்கும் மாசுக்களை நீக்கி பொலிவான மற்றும் பளபளப்பான சருமம் பெற உதவுகிறது!

Image Source: istock

Thanks For Reading!

Next: சுத்தமான சருமம் வேணுமா? வாரத்திற்கு ஒருமுறை முகத்தில் இதை தடவுங்க!

[ad_2]