May 23, 2024
சப்பாத்தி, ரொட்டியின் சுவையை கூட்டும் கிரேவி ஒன்றினை சௌசௌ மற்றும் சில மசாலா பொருட்கள் கலவையில் மிகவும் எளிமையாக தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!
Image Source: istock
சௌ-சௌ - 2 | சின்ன வெங்காயம் - 10 | தேங்காய் துருவல் - 1 கப் | காய்ந்த மிளகாய் - 4 | சீரகம் - 2 ஸ்பூன் | உப்பு - 1 ஸ்பூன்
Image Source: istock
கடுகு - ½ ஸ்பூன் | பெருங்காயம் - 1 சிட்டிகை | கறிவேப்பிலை - 1 கொத்து | கொத்தமல்லி - 1 கொத்து | எண்ணெய் - தேவையான அளவு
Image Source: istock
முதலில் எடுத்துக்கொண்ட சௌசௌ-னை சுத்தம் செய்து பின் பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.
Image Source: istock
தொடர்ந்து கிரேவி மசாலா தயார் செய்ய மிக்ஸர் ஜார் ஒன்றில் சின்ன வெங்காயம், தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், சீரகம், உப்பு சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ள மசாலா ரெடி!
Image Source: istock
பின் கிரேவி தயார் செய்ய கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெயுடன் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும். பின், சௌசௌ சேர்த்து வதக்கவும்.
Image Source: istock
சௌசௌ பொன்னிறமாக மாறியதும் இதில் அரைத்து வைத்த மசாலா மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து கிளறி நன்கு வேக வைக்கவும்.
Image Source: istock
இதனிடையே எடுத்துக்கொண்ட கொத்தமல்லி தழைகளை நன்கு பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.
Image Source: pexels-com
பின் இந்த கொத்தமல்லியை கடாயில் கொதிக்கும் கிரேவியில் சேர்த்து கலந்து அடுப்பில் இருந்து இறக்கிவிட சுவையான சௌசௌ கிரேவி ரெடி!
Image Source: istock
Thanks For Reading!