May 22, 2024
கொலாஜன் என்பது ஒரு விதமான புரதமாகும். இது சருமத்தின் கட்டமைப்பில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. சருமத்தை இளமையாக வைப்பதோடு நெகிழ்வுத் தன்மையை பராமரிக்க செய்கிறது. கொலாஜன் நிறைந்திருக்கும் சைவ உணவுகளைப் பற்றி இங்கு காணலாம்
Image Source: istock
மிளகாயில் விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. இவை கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது ஆக்ஸினேற்ற சேதத்தில் இருந்து சருமத்தை காக்கிறது.
Image Source: istock
கீரை மற்றும் முட்டைக்கோஸ் போன்ற பச்சையிலை காய்கறிகளில் குளோரோபில் உள்ளது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. இதுவும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது.
Image Source: istock
ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ் பெர்ரி மற்றும் ப்ளாக் பெர்ரியில் ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் வைட்டமின் சி காணப்படுகிறது. இது கொலாஜனை உற்பத்தி செய்கிறது.
Image Source: pexels-com
தக்காளியில் லைகோபீன் அதிகளவில் உள்ளது. இது சருமத்தை சூரிய ஒளியில் இருந்து காக்கிறது. இதில் வைட்டமின் சி காணப்படுகிறது.
Image Source: istock
கேரட்டில் விட்டமின் ஏ காணப்படுகிறது. இது சேதமடைந்த கொலாஜனை மீட்டெடுக்க உதவுகிறது. இது ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
Image Source: istock
பாதாம் பருப்புகள், அக்ரூட் பருப்புகள், சியா விதைகள் மற்றும் ஆளி விதைகளில் அத்தியாவசிய ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது வைட்டமின் ஈ சத்தை வழங்குகிறது. கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது.
Image Source: istock
ஆரஞ்சு, லெமன், திராட்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி காணப்படுகிறது. இது கொலாஜன் உற்பத்தியின் போது அமினோ அமிலங்களை இணைக்க உதவுகிறது.
Image Source: istock
பூண்டில் சல்பர் உள்ளடக்கம் உள்ளது. இது கொலாஜன் உடைவதை ஒருங்கிணைத்து தடுக்கிறது. இதிலுள்ள பிற சத்துக்கள், சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்கக்கூடும்
Image Source: istock
Thanks For Reading!