May 21, 2024
ஹைட்ரேட்டிங் ஃபேஸ் டோனர் ஒரு சிறந்த டோனராக செயல்படுகிறது. இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது உங்கள் சருமத்தை இளமையாக வைக்க உதவுகிறது. சருமத்தை ஹைட்ரேட்டிங் செய்கிறது.
Image Source: pexels-com
சமைக்காத அரிசி - 1/2 கப், 2 கப் தண்ணீர், 3-4 சொட்டுகள் அத்தியாவசிய எண்ணெய், ஒரு வைட்டமின் ஈ மாத்திரை
Image Source: istock
அரை கப் அரிசியை எடுத்து தண்ணீர் ஊற்றி அழுக்குகள் மற்றும் தூசிகள் இல்லாமல் நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்.
Image Source: istock
இரண்டு கப் தண்ணீர் ஊற்றி 3-4 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு கழுவிய அரிசியை அதில் போட்டு 10-15 நிமிடங்கள் வேக வையுங்கள்.
Image Source: istock
அரிசி நன்றாக வெந்த பிறகு வடிகஞ்சி கெட்டியானதும் அதை வடிகட்டிக் கொள்ளுங்கள். 5-10 நிமிடங்கள் ஆற விட வேண்டும்.
Image Source: istock
வைட்டமின் ஈ மாத்திரையில் இருந்து எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் அத்தியாவசிய எண்ணெயையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
Image Source: istock
இப்பொழுது இந்த கலவையை ஸ்ப்ரே பாட்டிலுக்கு மாற்றுங்கள். இந்த கலவையை முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் சருமம் ஈரப்பதத்தை பெறும்.
Image Source: istock
இந்த அரிசி தண்ணீர் சிறந்த ஃபேஸ் டோனராக செயல்படுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறை என பயன்படுத்தி வந்தால் சருமத்தை ஹைட்ரேட்டிங் செய்யலாம்.
Image Source: istock
இந்த கலவை உங்களுக்கு ஏதேனும் பக்கவிளைவை உண்டாக்குவதாக உணர்ந்தால், உடனே சரும மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்.
Image Source: istock
Thanks For Reading!