Jun 7, 2024
கோடை காலத்தில் சூரியனின் புற ஊதாக் கதிர்வீச்சால் நம் சருமம் சீக்கிரமே கருமை அடைந்து விடும். அதை போக்க நடிகை பிரியங்கா சோப்ரா சூப்பரான பியூட்டி டிப்ஸை பகிர்ந்துள்ளார். அந்த இயற்கை பேஸ் பேக் பற்றி இங்கு பார்க்கலாம்
Image Source: instagram-com/priyankachopra
1/2 கப் கடலை மாவு, 2 டீஸ்பூன் தயிர், 1/2 எலுமிச்சை, 4 டீஸ்பூன் பால், 1 டீஸ்பூன் சந்தன தூள் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
Image Source: istock
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் கடலை மாவை எடுத்துக் கொள்ளுங்கள்.
Image Source: istock
பிறகு அந்த கடலை மாவுடன் தயிர், பால், சந்தனத் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
Image Source: istock
கடைசியாக அதனுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
Image Source: istock
இப்பொழுது உங்கள் சருமத்தில் கருமை உள்ள இடங்களில் இந்த பேஸ்ட்டை அப்ளை செய்யுங்கள். நன்றாக உலர விட வேண்டும்.
Image Source: istock
இப்பொழுது நன்றாக உலர்ந்த பிறகு மெதுவாக தேய்த்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.
Image Source: pexels-com
கடலை மாவு ஒரு எக்ஸ்ஃபோலியண்ட்டாக செயல்படுகிறது. இது சூரியனால் ஏற்படும் கருமையை போக்குகிறது. சரும நிறத்தை சமன் செய்கிறது.
Image Source: istock
மஞ்சளில் குர்குமின் என்ற நிறமி காணப்படுகிறது. இது சூரிய ஒளியால் ஏற்படும் ஹைப்பர் பிக்மென்டேஷனை குறைக்கிறது. சருமக் கருமையை போக்குகிறது.
Image Source: istock
Thanks For Reading!